கதையில் தலையிட்டா கெட்ட பேர் வந்திடும்! -சிவகார்த்திகேயன்
முன்னணி ஹீரோக்களை பொறுத்தமட்டில் வளர்ந்து வரும் டைரக்டர்கள் அவர்களிடம் கதை சொன்னால், மொத்த கதையையும் கேட்டு விட்டு, பின்னர் தாங்கள் முதல் காட்சியில் இருந்து கடைசி காட்சி வரை எப்படி எப்படி வைக்கலாம் என்று ஒரு புதிய ஸ்கிரிப்ட்டையே சொல்லிவிடுவார்கள்.
அதேசமயம், முன்னணி டைரக்டர்கள் என்றால் மட்டும் தங்களது தலையீடை குறைத்துக்கொள்வார்கள். ஆனால், கெளதம்மேனன், பாலா போன்றவர்களிடம் எதுவுமே சொல்ல முடியாது. காரணம், அவர்கள் எந்த ஹீரோக்களிடமும் முழுக்கதையையும் சொல்வதே இல்லை.
இந்தநிலையில், சமீபத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த சிவகார்த்திகேயனிடம், நீங்கள் கதையை எப்படி செலக்ட் பண்ணுகிறீர்கள்? என்று மீடியாக்கள் கேள்வி எழுப்பியபோது, கூடுமான வரை கதைகளில் நான் திருத்தமெல்லாம் செய்வதில்லை.
கதையை கேட்டுவிட்டு எனக்கு பிடித்தால் ஓ.கே சொல்வேன். இல்லையேல் பிடிக்கவிலலை என்பதை நேரடியாகவே சொல்லிவிடுவேன் என்றார்.
குறிப்பாக, நிஜத்தில் நான் தண்ணி அடிப்பதில்லை, அதேபோல் புகைப்பிடிக்கும பழக்கமும் எனக்கு கிடையாது. அதற்காக நான் நடிக்கும் படங்களிலும் அந்த மாதிரி காட்சியில் நான் நடிக்க மாட்டேன் என்று சொல்ல முடியாது.
அப்படி சொன்னால், கதைக்கு தேவைப்படுகிறது வைத்திருக்கிறோம் என்பார்கள். அதனால்தான் எனது படங்களில் டாஸ்மாக் பாட்டு இடம் பெற்றாலும் நான் கண்டுகொள்வதில்லை என்றுசொன்ன சிவகார்த்திகேயன், ஒருவேளை எதற்காக இந்த மாதிரி காட்சியெல்லாம் வைக்கிறீர்கள்.
படம் பார்க்கும் ரசிகர்களை தவறான வழிக்கு திருப்புவது போல் இருக்குமே என்று நான் சமூக அக்கறையுடன் சொன்னால், சிவகார்த்திகேயன் கதையில் தலையிடுகிறார் என்பார்கள்.
அதன்காரணமாக, பீல்டில் கெட்ட பேர்தான் ஏற்படும். அதனால்தான் நான் உண்டு என் வேலை உண்டு என்றிருக்கிறேன் என்கிறார் சிவகார்த்திகேயன்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment