செல்வராகவன் கூட்டணியில் சிம்பு- த்ரிஷா

No comments
செல்வராகவன் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார்கள் சிம்பு - த்ரிஷா ஜோடி. இரண்டாம் உலகம் படத்தால் ஏற்பட்ட தோல்வியைத் தொடர்ந்து தனது அடுத்த படத்தை எப்படியாவது ’ஹிட்’படமாக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார் செல்வராகவன். இதற்காக விறுவிறுப்பான ஒரு ஸ்கிரிப்டை ரெடி செய்து, அதில் சிம்புவை ஹீரோவாக தெரிவு செய்துள்ளார். சிம்புவுடன் ஏற்கெனவே அலை, விண்ணைத் தாண்டி வருவாயா படங்களில் ஜோடி சேர்ந்து நடித்த த்ரிஷா இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிக்கிறார்.
 ‘ரேடியன்ஸ் மீடியா’ நிறுவம் சார்பில் வருண் மணியன் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் ஆரம்பமாகிறது.

No comments :

Post a Comment