ப்ரியாமணிக்கு சிபாரிசு செய்த ப்ருதிவிராஜ்!

No comments
பாரதிராஜாவினால் கண்களால் கைது செய் படத்தில் அறிமுகம் செய்யப்பட்ட நடிகை ப்ரியாமணி. அதையடுத்து பாலுமகேந்திரா இயக்கிய அது ஒரு கனாக்காலம் படத்திலும் நடித்தார். ஆக, அடுத்தடுத்து இரண்டு மெகா டைரக்டர்களின் மோதிரக்கையினால் குட்டுப்பட்ட ப்ரியாமணிக்கு அதற்கடுத்து நடித்த பருத்தி வீரன் படம் சிறந்த நடிகைக்கான தேசிய விருதினை பெற்றுக்கொடுத்தது. அதன்பிறகு தமிழில் பல படங்களில் நடித்தபோதும் அவருக்கான இடம் கிடைக்கவில்லை. அதனால் தெலுங்கு, கன்னடம் என்று சென்று விட்ட ப்ரியாமணி, மலையாளத்திலும் தொடர்ந்து நடித்தார். அப்போது ப்ருதிவிராஜூடன் சில படங்களில் ஜோடி சேர்ந்தார். 
அதேபோல் தமிழிலும், அவருடன் நினைத்தாலே இனிக்கும், ராவணன் படங்களில் நடித்தார். ஆனால் அதையடுத்து தெலுங்கு, கன்னட படங்களில் ப்ரியாமணி நடித்ததால் அவர்களுக்கிடைய இடைவெளி விழுந்தது. அதைத்தொடர்ந்து இப்போது மீண்டும் ஒரு மலையாள படத்தில் ப்ருதிவிராஜூடன் ஜோடி சேர்ந்திருக்கிறார் ப்ரியாமணி. 
பெயிண்டிங் லைப் என்ற பெயரில் கிராமத்து கதையில் உருவாகும் அப்படத்தை டைரக்டர் பைஜூ இயக்குகிறார். அப்படத்திற்கு கதாநாயகி தேடிக்கொண்டிருந்தபோது, இந்த மாதிரி கிராமிய கதைக்கு ப்ரியாமணி பொருத்தமாக இருப்பார் என்று பிருதிவிராஜ்தான் அவர் பெயரை முன் வைத்தாராம். அதன்பிறகுதான் உடனடியாக ப்ரியாமணியை தொடர்பு கொண்டு புக் பண்ணியிருக்கிறார்கள்.
 இந்நிலையில், சமீபகாலமாக சரியான படவாய்ப்புகள் இல்லாமல் கேரக்டர் நடிகையாக ரூட்டை மாற்றிக்கொண்டு வந்த ப்ரியாமணி, இந்த திடீர் வாய்ப்பினால் மீண்டும் உற்சாகமடைந்திருப்பவர், அடுத்தடுத்து மலையாளத்தில் புதிய படங்களை கைப்பற்றி அங்கு நிரந்தர நடிகையாகவும் திட்டம் தீட்டிக்கொண்டிருக்கிறார்.

No comments :

Post a Comment