நடிகைகளை அடிக்கும் பழக்கத்தை கைவிட்ட டைரக்டர் சாமி!

No comments
உயிர், மிருகம், சிந்து சமவெளி போன்ற சர்ச்சைக்குரிய படங்களை இயக்கியவர் சாமி. இதில் உயிர் படத்தில் சங்கீதாவை ஆபாச அண்ணியாக சித்தரித்தவர், அதற்கடுத்து மிருகம் படத்தை இயக்கியபோது படப்பிடிப்புக்கு சரியானபடி ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்று பத்மப்பிரியாவின் கன்னத்தில் பளார் பளார் என்று அறைந்து பெரும் சர்ச்சையை உருவாக்கினார். இதனால் பின்னர் சாமி படம் இயக்குவதற்கு தடை விதித்து ரெட் கார்டு போடப்பட்டது. அப்படி போடப்பட்ட தடை பின்னர் 6 மாதமாக்கப்பட்டதையடுத்து, சிந்து சமவெளி படத்தை எடுத்தார். அதுவும் வழக்கம்போல் காம நெடி கொண்ட படம்தான். 
மாமனார்-மருமகளின் லீலைகளை படமாக்கியிருந்தார். இதனால் மாதர் சங்கங்கள் கொதித்தெழுந்தன. அவரது வீடு, கார் தாக்கப்பட்டது. அதனால், இப்போது அந்த ஆபாச முத்திரையிலிருந்து விடுபடும் முயற்சியாக கங்காரு என்றொரு படத்தை இயக்கியிருக்கிறார் சாமி. 
 அண்ணன்-தங்கை பாசத்தை மையமாகக்கொண்டு உருவாகியுள்ள இந்த கங்காருவில் அகடம் படத்தில் நடித்த பிரியங்கா நாயகியாக நடித்திருக்கிறார். இப்படம் பற்றி அவர் கூறுகையில், பாசமலர் படத்தில் சாவித்ரி நடித்தது போன்று பாசக்கார தங்கையாக நான் இப்படத்தில் நடித்துள்ளேன். அதனால் நவீன சாவித்ரியாக ரசிகர்கள் என்னை கொண்டாடினாலும் ஆச்சர்யப்படவதற்கில்லை என்று மகிழ்ச்சியுடன் சொல்கிறார் பிரியங்கா.
 அவரிடத்தில் டைரக்டர் சாமி, ஸ்பாட்டில் ரொம்ப அடிக்கடி டென்சனாவார். சில சமயங்களில் கதாநாயகிகள் மீது கைவரிசையையும் காட்டி விடுவாரே. உங்கள் விசயத்தில் எப்படி நடந்து கொண்டார்? என்று கேட்டபோது, எனக்குள்ளும் அபப்டியொரு பயம் இருக்கத்தான் செய்தது. ஆனால், அவர் என்னிடம் ரொம்ப அன்பாக பழகினார். 
என்னை தட்டிக்கொடுத்து வேலை வாங்கினார். அதனால், ஹீரோயினிகளை அடிக்கும் பழக்கத்தை அவர் விட்டு விட்டதாகவே தெரிகிறது என்கிறார்

No comments :

Post a Comment