நிஜ வாழ்க்கையை சினிமா கதையோடு ஒப்பிடாதீர்கள்: வாலு இயக்குனர் சொல்கிறார்

No comments
சிம்பு, ஹன்சிகா நடிக்கும் வாலு படத்தை இயக்கி வருகிறார் விஜய் சந்தர். தற்போது ஐதராபாத்தில் இதன் படப்பிடிப்புகள் நடந்து வருகிறது. சிம்புவும், ஹன்சிகாவும் நடித்து வருகிறார்கள். படத்தில் சிம்பு, ஹன்சிகாவை நினைத்து ஒரு பாடல் பாடுகிறாராம். "நயன்தாரா வேண்டாம், ஆண்ட்ரியாவும் வேண்டாம் எனக்கு ஹன்சிகாவே போதும் போதும்..." என்று தொடங்குவதாக அந்த பாடல் உள்ளது. இந்த பாடல் நீக்கப்பட்டு விட்டதாக செய்திகள் வெளியானது. இதுகுறித்து விஜய் சந்தர் கூறியிருப்பதாவது: "கதையின் போக்கையொட்டி இந்த பாடல் எழுதப்பட்டது.
 ஹீரோ தன் காதலியை நினைத்து நண்பர்களுடன் பாடுவதாக அந்த பாடல் இருக்கிறது. சினிமா பாடலையும், கதையையும் நடிக்கும் நடிகர், நடிகைகளின் சொந்த வாழ்க்கையோடு ஒப்பிடாதீர்கள். இன்னும் இரண்டு பாடல்கள் படமாக்கப்பட இருக்கிறது" என்றார்.

No comments :

Post a Comment