ரா...ரா...ரா...ராஜசேகர்: பாலாஜி சக்திவேல் இயக்கும் புதிய படம்!

No comments
வழக்கு எண் 18/9க்கு பிறகு பாலாஜி சக்திவேல் இயக்கும் புதிய படத்தின் பெயர் ரா...ரா...ரா...ராஜசேகர். டைட்டில் புதுமையா இருக்கு. அதற்கான காரணம் படத்தில் இருக்கும். இயக்குனர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்துக்கு பாலாஜி சக்தி வேல் பர்ஸ்ட் காப்பி அடிப்படையில் தயாரித்து கொடுக்கிறார். இதற்காக அவர் எஸ்.கே டாக்கீஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை துவக்கி இருக்கிறார். விஜய்மில்டன் ஒளிப்பதிவு செய்கிறார். லிங்குசாமியின் அண்ணன் மருமகன் மதி கதையின் நாயகனாக நடிக்கிறார். மற்ற நடிகர் நடிகைகள் தேர்வு நடந்து வருகிறது.
 "கதை பற்றி இப்போது எதுவும் சொல்ல முடியாது. ராஜசேகர் என்பது கதையின் முக்கிய கேரக்டரின் பெயர் அந்த ரா...ரா...ரா... என்ன என்பதுதான் கதையோட மெயின் ஏரியா. முழு படமும் பசுமை சூழந்த மலைப்பகுதிகளில் நடக்கிறது" என்கிறார் பாலாஜி சக்திவேல்.

No comments :

Post a Comment