அம்மாவுக்கும், மாமியாருக்கும் பெரிய வித்தியாசம் இல்லை!- சொல்கிறார் சரண்யா
மனோரமாவின் அம்மா மார்க்கெட் சரிந்த பிறகு, அந்த இடைவெளியை நிரப்பியவர் சரண்யாதான். அவரைப்போன்ற எத்தனையோ மாஜி ஹீரோயின்கள் அந்த இடத்தை பிடிக்க முண்டியடித்தபோதும், சரண்யாவின் இயல்பான நடிப்புக்கு ரசிகர்களை மாதிரியே இயக்குனர்களும் சரண்டராகி விட்டனர். அதனால் படத்துக்குப்படம் அம்மா வேடங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார் சரண்யா.
குறிப்பாக இளவட்ட கதாநாயகர்களின் நிரந்தர அம்மாவாகி விட்ட சரண்யா, தற்போது பப்பாளி என்றொரு படத்தில் மாமியாராக நடித்திருக்கிறார்.
இந்த வேடத்தில் நடித்த அனுபவம் எப்படி இருந்தது? என்று அவரைக்கேட்டால், என்னை எல்லா டைரக்டர்களுமே அம்மா வேடத்துக்குத்தான் கூப்பிடுவாங்க. ஆனா இந்த படத்தோடு டைரக்டர் கோவிந்த மூர்த்தி என்னை மாமியார் வேடத்தில் நடிக்க கூப்பிட்டார்.
ஆனாலும், என்னைப்பொறுத்தவரை இந்த வேடமும் அம்மா வேடத்தில் நடித்தது மாதிரிதான் இருந்தது. காரணம், ஒரு மருமகனுக்கு எப்படி மாமியார் இன்னொரு அம்மா மாதிரியோ, அதேபோன்று ஒரு மாமியாருக்கும், மருமகன் ஒரு மகனைப்போன்றுதான்.
அதனால் மகனிடம் எப்படி பாசம் காட்டி நடிப்பேனோ, அதேபோன்றுதான் இந்த படத்தில் மருமகனையும் மகனாக நினைத்து பாசம காட்டி நடித்தேன் என்று சொல்லும் சரண்யா, அம்மாவுக்கும், மாமியாருக்கும் பெரிய வித்தியாசம் ஏதும் இல்லை என்கிறார்.
அதனால், இதுவரை அம்மா வேடங்களை மட்டுமே நடித்திருந்தவர், இனிமேற்கொண்டு மாமியார் வேடங்களையும் சேர்த்து நடிக்கப்போகிறாராம். ஆக, இந்த சேதியறிந்து அக்கா, அண்ணி, மாமியார் போன்ற வேடங்களில் நடித்து காலம் தள்ளி வரும் நடிகைகள் கலங்கிக்கிடக்கிறார்கள்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment