லட்சுமி மேனனுடன் காதலா?: விஷால் விளக்கம்

No comments
விஷால், லட்சுமிமேனன் இடையே காதல் மலர்ந்துள்ளதாக செய்திகள் பரவி உள்ளன. இருவரும் பாண்டிய நாடு படத்தில் ஜோடியாக நடித்தனர். தொடர்ந்து நான் சிகப்பு மனிதன் படத்திலும் இணைந்து நடிக்கிறார்கள். இந்த படத்தில் விஷாலுடன் முத்த காட்சியில் லட்சுமி மேனன் துணிச்சலாக நடித்துள்ளார். இருவரும் தனிமையிலும், போனிலும் மணிக்கணக்கில் பேசுவதாகவும் கிசுகிசுக்கின்றனர். சமீபத்தில் நடந்த பட விழாவொன்றில் சக நடிகர்கள் விஷாலையும் லட்சுமி மேனனனையும் இணைத்து கிண்டலடித்து பேசி பரபரப்பு ஏற்படுத்தினர். லட்சுமிமேனனை மற்ற நடிகர்கள் கண்களில் காட்டாமல் விஷால் பொத்தி பொத்தி பாதுகாக்கிறார் என்று பேசினார்கள். இந்த காதல் கிசுகிசுகளுக்கு விஷால் பதில் அளித்துள்ளார். 
அவர் கூறும் போது லட்சுமிமேனனும் நானும் நட்பாகத்தான் பழகுகிறோம். எங்கள் இருவர் இடையிலும் நட்பை தாண்டி வேறு எதுவும் இல்லை. லட்சுமிமேனன் திறமையான நடிகை என்றார்.

No comments :

Post a Comment