ரஜினியின் வாழ்க்கை திரைப்படமாகிறது!

No comments
ரஜினியின் வாழ்க்கையை பின்பற்றி ஒரு படம் தயாராகிறது. தனது வாழ்க்கையை பஸ் கண்டக்டராக அவர் தொடங்கியது முதல், சினிமாவில் நடிக்க வந்தது, சாதித்தது, ஆன்மீகத்தில் ஈடுபட்டது என அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கி இந்த படம் தயாராகிறதாம். தமிழில் நானே ரஜினிகாந்த், இந்தியில் மை ஹோ ரஜினிகாந்த் என்ற பெயரில் உருவாகும் இப்படத்தை பைசல்பை என்பவர் இயக்குகிறார். இப்படத்தில் ரஜினி வேடத்தில் ஆதித்யா மேனன் என்பவர் நடிக்கிறார். மலையாளம், தெலுங்கு படங்களில் வில்லனாக நடித்து வரும் இவர், தமிழில் ஆஞ்சநேயா, சத்ரபதி, நெறஞ்ச மனசு அசல், பில்லா, சிங்கம், ஓநாயும் ஆட்டுக்குட்டியும், உள்பட பல படங்களில் நடித்திருக்கிறார்.
 ரஜினியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்கும் வாய்ப்பு கோலிவுட் நடிகர்களுக்கே கிடைக்காதபோது, தனக்கு கிடைத்திருப்பதை பெரும் பாக்கியமாக கருதும் ஆதித்யாமேனன், இது கிடைப்பதற்கரிய வாய்ப்பு. இந்த படத்தை நாங்கள் ரஜினிக்கு அர்ப்பணிக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.

No comments :

Post a Comment