தமிழர் தயாரித்திருக்கும் ஹாலிவுட் படம் - பிளட் அண்ட் கர்ரி
அமெரிக்காவில் வசிக்கும் தமிழரான ஜாக் ஏ ராஜசேகர் இங்கிருந்து அமெரிக்கா செல்லும் தமிழ்ப்பட இயக்குனர்களுக்கும் பெரும் உதவியாக இருந்து வருகிறார். ரஜினி மற்றும் ஷங்கரின் 'எந்திரன்' படத்தின் ஹாலிவுட் தொழில்நுட்ப பிரிவின் சிஇஓ.,வாகவும் பணியாற்றியிருக்கிறார். தற்போது தயாரிப்பிலிருக்கும் பூலோகம் படத்தில் ஜாக்.ஏ.ராஜசேகரின் பங்கு பிரதானமாக இருக்கிறது. பூலோகம் படத்தில் நடித்திருக்கும் வெளிநாட்டு வில்லன்களை தந்து உதவியதே இவர்தான். தற்போது ஹாலிவுட்டில் ஒரு ஆங்கில படத்தை தயாரித்திருக்கிறார் ஜாக் ஏ ராஜசேகர்.
இந்த படத்தின் பெயர் 'பிளட் அண் கர்ரி'. ஆங்கில படத்தை எடுத்தாலும், அதை இந்தியர்களின் அடையாளத்தோடு எடுத்திருக்கிறார். பிளட் கர்ரி படத்தின் கதை என்ன வெளிநாட்டிற்கு திருமணமாகி செல்லும் இந்திய பெண்களுக்கு ஏற்படும் துயரங்களை சொல்லுகிற படம்தானாம் இது.
மனைவி இறந்து கிடக்கிற காட்சியிலிருந்து படம் துவங்குகிறது.
அதிர்ச்சியான கணவன் அமெரிக்காவின் அவசர உதவிக்கான 911 எண்ணை உதவிக்கு அழைக்க முற்படுகிறான். அந்த நேரம் பார்த்து வாசலில் காலிங் பெல் ஒலிக்கிறது. கதவு லென்ஸ் வழியாக பார்த்தால், மனைவியால் பார்ட்டிக்கு அழைக்கப்பட்ட நண்பர்கள் நிற்கிறார்கள். வேறு வழியில்லாத அந்த கணவன், மனைவியின் உடலை வீட்டுக்குள் மறைத்து வைத்துவிட்டு அவர்களை உள்ளே அழைக்கிறான்.
அவர்களுக்கு சந்தேகம் வந்துவிடாதபடி அவன் சமாளிப்பது நகைச்சுவையாகவும், பரபரப்பாகவும் நகர்ந்து கொண்டிருக்கிறது. அவள் ஏன் இறந்தாள்? அவளது பிணத்தை என்ன செய்தான்? என்பதை படத்தின் முடிவில் அதிர்ச்சியடைகிற விதத்தில் சொல்லியிருக்கிறாராம் படத்தின் இயக்குனர் அதுல் ஷர்மா.
உலகம் முழுவதும் ஒரே நாளில் இந்த படத்தை வெளியிடும் வேலைகளில் மும்முரமாக இருக்கிறார் ஜாக் ஏ.ராஜசேகர்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment