மீண்டும் வில்லன் வேடத்தில் நாசர்!

No comments
கமலுடன் தேவர் மகன், குருதிப்புனல் உள்பட சில படங்களில் வில்லனாகவும் நடித்தவர் நாசர். ஆனால் வில்லனாக வேகமாக வளர்ந்து கொண்டிருந்த நேரத்தில் அவதாரம் படம் மூலம் திடீரென நாசர் ஹீரோவாக மாறினார். அதனால், அதையடுத்து அவரை வில்லன் வேடங்களுக்கு யாருமே அழைக்கவில்லை. அதனால் அப்பா, மாமா என்று முழுநேர கேரக்டர் நடிகராக மாறினார் நாசர். இந்தநிலையில், தனது விஸ்வரூபம் படத்தில் நாசருக்கு ஒரு தீவிரவாதி வேடம் கொடுத்த கமல், இப்போது தனது உத்தம வில்லன் படத்தில் மீண்டும் அவரை வில்லனாக்கியிருக்கிறார். இப்படத்தில் 8-ம் நூற்றாண்டு, 21ம் நூற்றாண்டு என இரண்டு காலகட்டத்து நடிகராக கமல் நடிக்கும் நிலையில், 8-ம் நூற்றாண்டு கமலுடன் மோதும் வில்லனாக நாசர் நடிக்கிறாராம்.
 அதிலும் சமீபகாலத்து படங்கள் போல் இல்லாமல், எம்ஜிஆரும், நம்பியாரும் சீன் பை சீன் மோதிக்கொள்வது போன்று இருவரும் மோதிக்கொள்கிறார்களாம். அதனால் இப்படத்தில் நடிக்க 25 நாட்களுக்கு மேல் கால்சீட் கொடுத்திருக்கிறார் நாசர். அதோடு, நீண்ட நாளைக்குப்பிறகு ஒரு பெரிய வில்லன் வேடம் கிடைத்திருப்பதால், தற்போது பிரகாஷ்ராஜ் போன்ற வில்லன் நடிகர்கள் சரிவை சந்தித்திருக்கும் இந்த நேரத்தில் அந்த காலி இடத்தை தான் நிரப்பி விட வேண்டும் என்றும் வரிந்து கட்டியிருக்கிறார் நாசர்.

No comments :

Post a Comment