மீண்டும் தமிழில் என்ட்ரியாகும் கெளசல்யா!

No comments
சமீபகாலமாக மாஜி நடிகைகள் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுப்பது அதிகரித்து வருகிறது. அந்த வகையில், ராதிகா, மீனா, ரோஜா, நதியா, அம்பிகா, ஊர்வசி, சிம்ரன், தேவயானி, மதுபாலா உள்ளிட்ட பல நடிகைகள் மீண்டும் சினிமாவில் கோலோச்சி வருகின்றனர். குறிப்பாக, தமிழ், மலையாளத்தில் அதிகமாக நடித்து வரும் இவர்களில் இப்போது கெளசல்யாவும் என்ட்ரி கொடுத்துள்ளார். தாமிரபரணிக்கு பிறகு டைரக்டர் ஹரியும், விஷாலும் இணையும் பூஜை படத்தில் கெளசல்யாவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த வேடம் கொடுத்திருக்கிறார்களாம். காலமெல்லாம் காதல் வாழ்க என்ற படத்தில் முரளியுடன் நடித்த கெளசல்யா அதன்பிறகு சொல்லாமலே, ப்ரியமுடன், ஆசையில் ஓர் கடிதம், வானத்தைப்போல என பல படங்களில் நடித்தார்.
 பின்னர் கதாநாயகி வாய்ப்பு குறைந்தபோது, ஜெயம்ரவி நடித்த சந்தோஷ் சுப்பிரமணியம் படத்தில் அவருக்கு அண்ணியாக நடித்தார். தொடர்ந்து படங்கள் இல்லாததால் சொந்த ஊரான பெங்களூருக்கு சென்று விட்ட கெளசல்யா, இப்போது மீண்டும் பூஜை படம் மூலம் தமிழுக்கு வந்திருப்பவர், வித்தியாசமான கேரக்டர்களில் நடிக்க விருப்பம் தெரிவித்து தீவிர முயற்சி எடுத்து வருகிறார். 
 மேலும் சில நடிகைகளைப்போன்று வெட்டி பந்தா பண்ணாத இயல்பான நடிகை என்பதால், கெளசல்யாவின் மீது சில படாதிபதிகளின் பார்வை விழுந்திருக்கிறது. அதனால், அடுத்து கேரக்டர் ஆர்ட்டிஸ்டாக அவர் ஒரு பெரிய ரவுண்டு வரும் சூழ்நிலை உருவாகியிருக்கிறது.

No comments :

Post a Comment