சமந்தாவை அசர வைத்த விஜய்யின் கலக்கல் நடனம்!!

No comments
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், விஜய் நடித்து வரும் 2வது படம் கத்தி. இப்படத்தில் இரண்டு வேடங்களில் நடிக்கும் விஜய்க்கு இது 57வது படமாகும். நல்லவன், கெட்டவன் என இரண்டு விதமான கதாபாத்திரங்களில் நடிக்கும் கத்தியில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார். தமிழில் ஒரு சரியான என்ட்ரிக்காக காத்திருந்த சமந்தா, சூர்யாவுடன் அஞ்சான் படத்தில் நடித்த கையோடு இப்போது விஜய்யுடன் கத்தியில் நடித்துக்கொண்டிருக்கிறார். ஆரம்பத்திலிருந்தே ஆக்ஷன் சம்பந்தப்பட்ட காட்சிகளையே படமாக்கி வந்த முருகதாஸ், இப்போது ரொமான்ஸ், பாடல் என்று அடுத்த கட்டத்துக்கு சென்றிருக்கிறார். அதனால், இதுவரை சமந்தாவை கண்டுகொள்ளாமல் இருந்தவர் இப்போது, அவரையும் வரவைத்து விஜய்யுடன் ரொமான்ஸ் காட்சிகளாக படமாக்கிக்கொண்டிருக்கிறார்.
 ஆரம்பத்தில் கலகலப்பு, கிளுகிளுப்பு என்று காட்சிகளை நகர்த்தியவர், தற்போது ஐதராபாத்தில் விஜய்-சமந்தா கலக்கல் நடனமாடும் பாடலை படமாக்கி வருகிறார். ஏற்கனவே நடனத்தில் புயலான விஜய், இந்த பாடல் காட்சியில் சமந்தாவே அசறும் அளவுக்கு சில நடன அசைவுகளில் பின்னி பெடலெடுத்து விட்டாராம். அதைப்பார்த்து சமந்தா அசந்து விட்டாராம். 
நானும் இதுவரை எத்தனையோ நடிகர்களுடன் நடனமாடியிருக்கிறேன். ஆனால் விஜய்யின் துடிப்பும், வேகமும் வேறு யாரிடத்திலும் கண்டதில்லை. மேலும், அவரைப்போலவே நாமும் அதிரடியாக நடனமாட வேண்டும் என்ற உற்சாகமும் எனக்குள் ஏற்பட்டது என்கிறார்.

No comments :

Post a Comment