ரஜினியை ரசிக்க ஓடிவந்த புதுமுக நடிகை மாளவிகா!

No comments
கடந்த கால நடிகைகளுக்கு ரஜினியுடன் ஒரு படத்திலேனும் நடிக்க வேண்டும் என்று இருந்து வந்த கனவு இப்போது, அப்படியே அஜீத் பக்கம திரும்பி விட்டது. என்றாலும், ரஜினி என்ற அந்த ஒரு வார்த்தைக்கு இருக்கிற ஈர்ப்பு இன்னமும் நடிகைகளுக்கிடையே இருக்கத்தான் செய்கிறது. அதிலும் குக்கூ என்ற படத்தில் நடித்துள்ள மலையாள வரவு நடிகை மாளவிகா, ரஜினியின் தீவிரமான ரசிகையாம். அவரது ஸ்டைலான நடிப்பு அவருக்கு ரொம்ப பிடிக்குமாம். அப்படிப்பட்டவர், சமீபத்தில் தான் ஒரு சேனலுக்கு பேட்டி கொடுக்க சென்றிருநதபோது, அதே சேனலுக்கு ரஜினியும் பேட்டி கொடுக்க வந்திருக்கிறார் என்ற செய்தி காதுக்கு வந்ததும் துள்ளிக்குதித்து விட்டாராம். 
ரஜினியை டிவியில் பார்த்தாலே குதூகலிக்கும் நடிகைக்கு, அவரும் தான் இருக்கிற சேனலுக்கு வந்திருக்கிறார் என்றதும் தான் கொடுத்துக்கொண்டிருந்த பேட்டியை பாதியில் நிறுத்தி விட்டு ரஜினியை காண ஆவலோடு ஓடினாராம். ஆனால், ரஜினி பேட்டி அளிக்கும் ஸ்டுடியோவுக்குள் அதிகமான நபர்கள் அனுமதிக்கப்படவில்லையாம். 
இருப்பினும் ரொம்ப தூரத்தில் நின்றபடியே அவரை பார்த்து ரசித்தாராம் மாளவிகா. அதோடு, அவர் பேட்டி அளித்துவிட்டு செல்லும் வரைக்கும் அங்கே நின்று கொண்டிருந்தவர் அவர் செல்லும்போது அருகில் வந்து ரஜினியை பார்த்து மகிழ்ந்தாராம். தமிழ் சினிமாவுக்கு வந்து ரஜினியுடன் நடிக்கிறேனோ இல்லையோ அவரை பக்கத்தில் நின்று பார்த்து விட்டேன். அந்த ஒரு திருப்தி போதும் என்று தனது மகிழ்ச்சியை தெரிவித்துக்கொண்டிருக்கிறார்

No comments :

Post a Comment