இறுதிக் கட்டத்தில் ராமானுஜன்!
மோகமுள், பாரதி, பெரியார் போன்ற புகழ்பெற்ற படங்களை இயக்கிய ஐ.ஏ.எஸ் அதிகாரி ஞானராஜசேகரன் அடுத்து இயக்கி வரும் படம் ராமானுஜன். ஈரோட்டில் பிறந்து கும்பகோணத்தில் வளாந்து, தனது கணித அறிவால் உலகை வென்ற தமிழன் கணிதமேதை ராமானுஜத்தின் வாழ்க்கை கதை. ஜெமினி, சாவித்திரி தம்பதிகளின் மகன் அபிநய் ராமானுஜனாக நடிக்கிறார். பாமா அவரது மனைவியாகவும், சுஹாசினி அவரது தாயாராகவும் நடிக்கிறார்கள். ராமானுஜர் வாழ்ந்த ஈரோடு, கும்பகோணம், சென்னை, லண்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைகழகம் ஆகியவற்றில் படப்பிடிப்பு நடந்தது. லண்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைகழத்தில் படமாக்கப்பட்ட ஒரே படம் ராமானுஜன்தான்.
படத்தை பற்றி இயக்குனர் ஞானராஜ சேரகன் கூறியதாவது: ஆங்கிலேயர் நம்மை அடிமையாக்கி வைத்திருந்தபோது நம்மை முட்டாள்கள் என்றும் அடிமைகள் என்றும் கருதி வந்தார்கள். அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் அவர்களைவிட அறிவில் சிறந்தவாராக உருவானவர் ராமானுஜன். அவரை அறிவாளியாக ஒத்துக் கொள்ளாத ஆங்கிலேய அரசு அவரை சராசரி மனிதனாக காட்ட பல முயற்சிகளை எடுத்து அவரை துன்புறுத்தியது.
ஆனால் அவரையும் அடையாளம் காட்டியது ஜி.எச் ஹார்டி என்ற ஆங்கில பேராசிரியர். அவர்தான் ராமானுஜரின் கணித கண்டுபிடிப்புகளை உலகக்கு காட்டியவர்.
சொந்த குடும்பத்தாலேயே அங்கீகரிக்கப்படாதவர் ராமானுஜன். ஒரு சினிமாவுக்கான சகல விஷயங்களும் அவரது வாழ்க்கையில் இருக்கிறது. அதனால்தான் படம் எடுக்க துணிந்தேன். தற்போது இறுதி கட்ட வேலைகள் நடந்து வருகிறது. கோடை விடுமுறையில் படத்தை வெளியிட்டு அனைத்து மாணவர்களைக்கும் ராமானுஜரைக் காட்ட முடிவு செய்திருக்கிறோம்.
இவ்வாறு ஞானராஜசேகரன் கூறினார்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment