வெற்றிப் பயணம் ஆகிறது மலையாள கரன்சி!
2009ம் ஆண்டு மலையாளத்தில் வெளிவந்த படம் கரன்சி. முகேஷ், ஜெயசூர்யா, மீரா நந்தன் நடித்திருந்தனர். ஸ்வாதி பாஸ்கர் இயக்கி இருந்தார். 100 நாட்கள் ஓடிய படம். அதனை இப்போது வெற்றிப் பயணம் என்ற பெயரில் தமிழில் டப் செய்து வெளியிடுகிறார்கள். குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க ஆசைப்படும் இரண்டு இளைஞர்கள் கள்ள நோட்டு அச்சடித்து புழக்கத்தில் விடுகிறார்கள். சொகுசு வாழ்க்கையில் மிதக்கிறார்கள். ஆனால் அந்தப் பணத்தால் ஒருவனுக்கு தன் காதலியை கரம்பிடிக்க முடியவில்லை. இன்னொருவனுக்கு தன் தாயை காப்பாற்ற முடியவில்லை. கடைசியில் நிஜ பணம்தான் மதிப்பு மிக்கது என்பதை அவர்கள் உணர்கிற கதை.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment