யூ சான்றிதழ் வாங்கிக் கொடுத்த டாஸ்மாக் பாட்டு!
ஒரு படத்தில் டாஸ்மாக் பாட்டு இருந்தால் அந்த படத்துக்கு உறுதியாக யு/ஏ அல்லது ஏ சர்ட்டிபிக்கேட்தான். வரிவிலக்கும் கிடைக்காது. நாங்க விற்போம், ஆனால் நீங்க காட்டக்கூடாது என்பது அரசின் பாலிசி. முதன் முறையாக ஒரு டாஸ்மாக் பாடலுக்காகவே அந்த படத்தின் மற்ற குறைகளை கண்டுகொள்ளாமல் யூ சான்றிதழ் கொடுத்துள்ளது தணிக்கை குழு.
ஆசாமி என்ற பெயரில் போலி சாமியார்களை பற்றி படம் எடுத்த ஆண்டாள் ரமேஷ் இப்போது, இன்னாருக்கு இன்னார்தான் என்று இறைவன் எழுதி வைத்ததை யாராலும் மாற்ற முடியாது என்ற கருத்தை கொண்ட இன்னாருக்கு இன்னாரென்று என்ற பெயரில் ஒரு படத்தை எடுத்திருக்கிறார்.
சிலம்பரசன் (சிம்பு அல்ல), ஸ்டெபி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். குடிக்காதீங்கப்பா... என்று அட்வைஸ் பண்ணும் பாடல் ஒன்றை இயக்குனர் ஆண்டாள் ரமேஷ் எழுதி அந்த பாட்டுக்கு ஆட்டமும் போட்டிருக்கிறார்.
"கேட்டுக்க நண்பா கேட்டுக்க, மாத்திக்க நண்பா மாத்திக்க..." என்று துவங்கும் அந்தப் பாடல் குடியின் தீமையை புட்டு புட்டு வைக்கிறதாம். வேல்முருகன் பாடியிருக்கிறார்.
படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் இந்த பாட்டுக்காகவே படத்துக்கு யூ சான்று தர்றோம் என்று சொல்லி யூ சர்ட்டிபிக்கேட் கொடுத்திருக்கிறார்கள். அதோடு வழக்கமாக பாட்டிலின் பிராண்டை மறைக்க சொல்வார்கள். அதைக்கூட செய்ய சொல்லவில்லையாம். இதை பெருமையாக சொல்கிறார் ஆண்டாள் ரமேஷ்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment