மே 20 முதல் 25 வரை சென்னையில் பெண்கள் சர்வதேச திரைப்பட விழா!
சென்னையில், பெண்கள் சர்வதேச திரைப்பட விழா மே 20 முதல் 25ம் தேதி வரை நடக்கிறது. பெண்களால் இயக்கப்பட்ட திரைப்படங்களும், பெண்களை நல்வழியில் சித்தரித்து உருவான படங்களும் இதில் பங்கேற்கவுள்ளன. இதுப்பற்றிய விபரம் வருமாறு...
இவண்ட்டா தென் இந்திய நிறுவனம் நடத்தவுள்ள இத்திரைப்பட விழாவில் விளம்பர படங்கள், குறும்படங்கள், முழுநீள திரைப்படங்கள், விளக்க திரைப்படங்கள் உள்ளிட்ட பிரிவுகளில் தர வாரியாக படங்கள் திரையிடப்படுகின்றன.
கார்டூனிஸ்ட் மதன், கிரேசி மோகன், பெண் இயக்குநர்கள் பிரியா, நந்தினி, திரைவிமர்சகர் சதீஷ் குமார் உள்ளிட்டோர் போட்டி பிரிவுகளில் சிறந்த படங்களை தேர்வு செய்கின்றனர். இப்பிரிவுகளில் பங்கேற்கும் திரைப்படங்களுக்கு விருதுகள், பரிசுகள் வழங்கி கெளரவிக்கப்படவுள்ளன. மே 20ம் தேதி நடைபெறவுள்ள இதன் தொடக்க விழாவில் திரைபிரபலங்கள் பலரும் பங்கேற்க உள்ளனர்.
சென்னை, அமைந்தகரை பி.வி.ஆர். திரையரங்கிலும், வடபழனி ஆர்.கே.வி திரையரங்கிலும் இவ்விழா படங்கள் மேற்படி தேதிகளில் திரையிடப்படவுள்ளன.
www.eventjini.com/cwiff2014 எனும் இ-மெயில் முகவரியில் திரைப்படங்களையும், விண்ணப்பங்களையும் வரும் ஏப்ரல் 15ம் தேதிக்குள் அனுப்பலாம். இது சம்பந்தமான பத்திரிகையாளர் சந்திப்பில், மேற்படி விருது கமிட்டியுடன் இயக்குநர் கிருத்திகா உதயநிதியும் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
இவ்விழாவில் உங்களது படமும், உதயநிதி ஸ்டாலின் படங்களும் நிச்சயம் இடம்பிடிக்கும். அப்படித்தானே மேடம்.?!
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment