இனம் படத்தில் ஆட்சேபத்துக்குரிய ஐந்து காட்சிகள் நீக்கம்!
சந்தோஷ் சிவன் இயக்கியுள்ள 'இனம்' படத்திற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது. சிங்களர்களுக்கு ஆதரவாக படம் எடுக்கப்பட்டுள்ளதாக எதிர்ப்பு எழுந்துள்ளநிலையில், தமிழ்த் திரைப்பட இயக்குனர்கள் சங்கம் 'இனம்' படத்திற்கு ஆதரவாக சில கருத்துக்களை வெளியிட்டது. திருப்பதி பிரதர்ஸ் தயாரிக்கும் திரைப்படங்களை உலகம் முழுவதும் பரவிக் கிடக்கும் தமிழர்கள் புறக்கணிக்க முடிவெடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. இதை கருத்தில் கொண்டு இனம் படத்திலிருந்து ஆட்சேபகரமான காட்சிகளை நீக்கி விட்டதாக திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் சார்பாக தயாரிப்பாளர் லிங்குசாமி தெரிவித்திருக்கிறார்..
“இலங்கையில் இனப்படுகொலை செய்யப்பட்ட நம் தமிழர்களின் துன்பங்களையும், துயரங்களையும் உலகிற்கு எடுத்துச் சொல்ல வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே 'இனம்' திரைப்படத்தை வாங்கி வெளியிட்டோம். இந்நிலையில் சில முரண்பாடான கருத்துக்கள் உருவானதைத் தொடர்ந்து 'இனம்' படத்தை தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்க உறுப்பினர்களுக்கும், சில தமிழ் அமைப்பைச் சேர்ந்தவர்களுக்கும் திரையிட்டுக் காட்டினோம்.
படத்தைப் பார்த்த பிறகு தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கமும், தமிழ் அமைப்பைச் சேர்ந்தவர்களும் கேட்டுக் கொண்டதன்படி கீழே குறிப்பிட்டுள்ள,
1. பள்ளிக்கூடக் காட்சி
2. புத்தமதத் துறவி தமிழ்க் குழந்தைகளுக்கு மாதுளம்பழம் கொடுக்கும் காட்சி
3. சிங்கள ராணுவத்தான் குழந்தை போட்டோ வைத்திருக்கும் காட்சி
4. தலைவர் கொல்லப்பட்டார் என்ற ஒரு காட்சியின் வசனம்
5. படத்தின் இறுதியில் காட்டப்படும் கார்டில் 38,000 பேர் கொல்லப்பட்டார்கள்
என்ற தகவல்,
என்கிற ஐந்தும் படத்திலிருந்து நீக்கப்பட்டு விட்டன என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன், ” என்று குறிப்பிட்டுள்ளார் லிங்குசாமி.
இதை முதலிலேயே செய்திருந்தால் இத்தனை பிரச்சனை வந்திருக்காதே..
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment