வரலாறு காணாத வசூல் சாதனையுடன் 100 நாளை கடந்தது த்ரிஷ்யம்

No comments
மலையாள சினிமாவின் அனைத்து ரெக்கார்டுகளையும் உடைத்து எறிந்துவிட்டு 100 நாளை கடந்து விட்டது த்ரிஷ்யம். மோகன்லால், மீனா நடித்த இந்தப் படம் 150 தியேட்டர்களில் திரையிடப்பட்டது. இதில் 60 தியேட்டர்களில் தொடர்ந்து ஒடி 100 நாட்களை கடந்திருக்கிறது. சென்னை, பெங்களூரு, புனே, மும்பையில் உள்ள மல்டிபிளக்ஸ் தியேட்டர்களிலும் 100 நாளை கடந்திருக்கிறது. கேரள தியேட்டர்களில் மட்டும் 40 கோடி வசூலித்துள்ளது. வெளிநாடுகளில் 10 கோடி வசூலித்துள்ளது. 
தொடர்ந்து ஷிப்டிங் தியேட்டர்களிலும் ஓடி வசூலைக் கொட்டிக் கொண்டிருக்கிறது. தொலைக் காட்சி உரிமம், ரீமேக் உரிமம் அனைத்தையும் சேர்த்தால் த்ரிஷ்யத்தின் வியாபார மதிப்பு 100 கோடியை எட்டும் என்கிறார்கள். இது மலையாள சினிமா வரலாற்றில் இதுவரை இல்லாத சாதனை. 
 த்ரிஷ்யம் தெலுங்கு, கன்னடம், தமிழ், இந்தி மொழிகளில் ரீமேக் ஆகிறது. ஒரே நேரத்தில் அதிக மொழிகளில் ரீமேக் ஆகும் மலையாளப்படமும் த்ரிஷ்யம்தான்.

No comments :

Post a Comment