கனத்த இதயத்துடன் கட்டிப்பிடித்து நடித்த சிம்பு-ஹன்சிகா!

No comments
சிம்பு-ஹன்சிகாவின் காதல் கதை கண்ணை மூடி திறப்பதற்குள் நடந்து முடிந்து விட்டது. வாலு படத்தில் நடிக்கத் தொடங்கிய சில நாட்களிலேயே ஹன்சிகாவே சிம்புவின் நன்னடத்தையை கண்டு தனது மனதை பறிகொடுத்து விட்டதாக சொல்லி டுவிட் செய்திருந்தார். ஆனால், இப்போது வாலு படபிடிப்பு முடிய சிலநாட்கள இருக்கும்போதே அவரிடமிருந்து தான் பிரிந்து விட்டதாகவும் அதே ஹன்சிகாவே டுவிட் செய்திருக்கிறார். ஆனபோதும், அதன்பிறகு சிம்புவுடன் இணைந்து நடிக்க அவர் மறுக்கவில்லை. வாலு படத்தில் நடிக்க வேண்டிய கடைசிகட்ட படப்பிடிப்பை சமீபத்தில் முடித்துக்கொடுத்துள்ளார்.
 அப்போது, சிம்பு-ஹன்சிகா இருவரும் வழக்கம்போல் ஹாய் சொல்லிக்கொண்டே கேமரா முன்பு வந்திருக்கிறார்கள். ஆனால், பழைய ஒட்டுதல் இல்லையாம். இருப்பினும், உள்ளத்தில் வெறுப்பையும், உதட்டில் விருப்பையும் வைத்தபடி கடமைக்காக கனத்த இதயத்துடன் நடித்தார்களாம். கூடவே கட்டிப்புடி காட்சிகளிலும் நடித்திருக்கிறார்கள்.
 ஆனால், நடந்து முடிந்த காதல் பயணம் குறித்து இருவருமே வாய் திறக்கவில்லையாம். அதோடு நடித்து முடித்ததும் ஸ்பாட்டை விட்டு வெளியேறும்போது குட்பை சொல்வது போல் சிம்புவுக்கு பை சொல்லி விட்டு விடைபெற்றாராம் ஹன்சிகா. ஆனால், இப்படி அவர்கள் ஒட்டாமல் நடித்தபோதும், கடைசியாக அவர்கள் நடித்த காட்சிகளில் காதல் இருக்கிறது, கவிதை இருக்கிறது என்கிறது வாலு டீம்.

No comments :

Post a Comment