புத்தாண்டு கொண்டாட்டமாக அரிமா நம்பி

No comments
தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு அரிமா நம்பி படத்தின் இசை வெளியாகவுள்ளது. கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில், ஆனந்த் சங்கர் இயக்கும், ‘அரிமா நம்பி’ படத்தின் படப்பிடிப்பு இப்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. விக்ரம் பிரபு, ப்ரியா ஆனந்த் ஜோடியாக நடிக்கும் இப்படத்திற்கு ’டிரம்ஸ்’ சிவமணி இசை அமைக்கிறார். இந்தப் படத்தின் மூலம் சினிமாவில் இசை அமைப்பாளராக அறிமுகமாகும் சிவமணியும், தயாரிப்பாளர் கலைப்புலி தாணுவும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டிருக்கிறார்கள். 
 வருகிற ஏப்ரல் 13ம் திகதி அதாவது தமிழ் புத்தாண்டு தினத்திற்கு முந்தைய நாள் இவ்விழா சென்னையில் நடைபெறவிருக்கிறது.

No comments :

Post a Comment