மீண்டும் உலகநாயகனுடன் ஜெயராம்

No comments
உத்தம வில்லன் படத்தில் மீண்டும் உலகநாயகனுடன் இணைகிறார் ஜெயராம். கமல்ஹாசன் கதை, திரைக்கதை எழுதி நடிக்கும் படம் 'உத்தம வில்லன்'. கிரேஸி மோகன் வசனம் எழுத இந்தப்படத்தை ரமேஷ் அரவிந்த் இயக்குகிறார். ஆண்ட்ரியா, பூஜாகுமார் மற்றும் 'மரியான்' பார்வதி, இதில் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். இவர்களுடன் ஊர்வசி, இயக்குனர் பாலச்சந்தர் ஆகியோரும் நடிக்கின்றனர். சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீஸர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது இந்த கூட்டணியில் ஜெயராமும் இணைந்திருக்கிறார்.
 ஜெயராம் தனது மைக்ரோ பிளாக் பக்கத்தில் உத்தம வில்லன் படத்தில் தானும் நடிக்கயிருப்பதாக கூறியுள்ளார். ஏற்கெனவே 'தெனாலி', 'பஞ்சதந்திரம்' போன்ற படங்களில் கமலுடன் ஜெயராம் இணைந்து நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

No comments :

Post a Comment