20 ஓவர் உலகக்கோப்பை தொடக்க விழாவில் ஏ.ஆர்.ரகுமான், ஏகான் கலைநிகழ்ச்சி
புதுடெல்லி, மார்ச் 14 -
20 ஓவர் உலகக்கோப்பை போட்டி வருகிற 16-ம் தேதி வங்கதேசத்தில் தொடங்குகிறது. இதன் தொடக்கவிழாவில் இரண்டு ஆஸ்கார் விருதுகளை வென்ற இந்திய இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் மற்றும் புகழ்பெற்ற ராப் பாடகர் ஏகான் கலந்து கொண்டு மாபெரும் இசை நிகழ்ச்சியினை நடத்தவுள்ளனர்.
இந்நிகழ்ச்சி வங்கதேச பங்காபந்து மைதானத்தில் தொடங்குகிறது. இதுதொடர்பாக ரகுமானை சந்தித்து பேசிய வங்கதேச பிரதமர் ஷைக்கா ஹசீனா, ஏ.ஆர்.ரகுமானை சந்தித்ததில் தான் மிகவும் மகிழ்ச்சியடைந்ததாகவும் அவர் பங்குபெறுவதன் மூலம் இப்போட்டிக்கு உலக அளவில் மிகப்பெரிய வரவேற்பு கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
இப்போட்டியில் பங்கு பெறுவதற்கு இந்திய அணி இன்று வங்கதேசத்திற்கு சென்றுள்ளது.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment