ஹாலிவுட்டைபோல் திரில்லர் படம் எடுப்பேன்: ஏ.ஆர்.முருகதாஸ்

No comments
டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ் ஐதராபாத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:– கஜினி படத்தை தெலுங்கில் மகேஷ்பாபுவை நடிக்க வைத்து ரீமேக் செய்ய ஆசைப்பட்டேன். அது நடக்கவில்லை. எனவே மீண்டும் மகேஷ்பாபுவை வைத்து பெரிய படம் ஒன்றை இயக்கப் போகிறேன். இப்படம் மகேஷ்பாபு நடிக்க சம்மதிக்காவிட்டால் ராம்சரன் தேஜாவை தேர்வு செய்வேன். பணம் சம்பாதிப்பதற்காக நான் சினிமா தயாரிப்பாளர் ஆகவில்லை. திறமையான இளைஞர்களை ஊக்கப்படுத்துவதற்காகவே பட அதிபர் ஆனேன். ஒவ்வொரு படத்திலும் திறமையான புது ஆட்களை அறிமுகம் செய்வேன்.
 சிறு பட்ஜெட் படங்கள் எடுப்பது, ஆபத்தானது. எனவேதான் பெரிய பட்ஜெட் படங்களை இயக்குகிறேன். ஹாலிவுட்டில் வருவது போல் திரில்லர் படம் இயக்க ஆசை. விரைவில் அது நடக்கும். இவ்வாறு அவர் கூறினார்

No comments :

Post a Comment