தமிழ் படத்தில் ஆஸ்திரேலிய நடிகை!

No comments
ஆஸ்திரேலியாவில் வசிக்கும் தமிழரான மதிவாணன் தானே ஹீரோவாக நடித்து இயக்கும் படம் மகா மகா. இளையராஜாவின் அண்ணன் பாவலர் வரதராசனின் மகன் சிவா இசை அமைக்கிறார். ஆஸ்திரேலியாவுக்கு வேலைக்குச் செல்லும் ஒரு இளைஞன் அங்கு கோடீஸ்வர வீட்டு பெண்ணை காதலிக்கிறான். அவள் திடீரென்று காணாமல் போகிறாள். அவன் அவளைத் தேடி அலைகிறான். அவன்தான் கடத்தி இருப்பான் என்று அவளின் தந்தை இவனைத் தேடி அலைகிறார். 
இப்படி ஒரு சேசிங் ஆக்ஷன் கதையாம். முழு படமும் ஆஸ்திரேலியாவில் தயாராகி உள்ளது. ஆஸ்திரேலியாவில் தியேட்டர் ஆர்ட்டிஸ்டாக இருக்கும் இந்திய வம்சாவளியை சேர்ந்த மெலிசா ஹீரோயினாக நடித்துள்ளார். அவருடன் நிழல்கள்ரவி, அனுபமா குமார் மற்றும் ஆஸ்திரேலிய நடிகர் நடிகைகள் நடித்துள்ளனர்.

No comments :

Post a Comment