தயாரிப்பாளர் சங்க பொதுக்குழு அடுத்த மாதம் கூடுகிறது!

No comments
தயாரிப்பாளர் சங்கத்திற்கு கேயார் தலைமையிலான புதிய நிர்வாகம் வந்த பிறகும் பிரச்னைகள் தீர்ந்தபாடில்லை. கோஷ்டி பூசல், ஈகோ பிரச்னை, கோர்ட்டு வழக்கு என்று தொடர்ந்து கொண்டிருக்கிறது. இவையெல்லாம் முடிந்து இப்போதுதான் சகஜ நிலைக்கு சங்கம் வந்திருக்கிறது. தயாரிப்பாளர் சங்கத்திற்கு எதிராக தாணு கொடுத்த 8 வழக்குகளும், அதன் மேல்முறையீடுகளும் உயர்நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது. தாணு சங்கத்தின் பொதுக்குழுவை தன்னிச்சையாக கூட்ட உறுப்பினர்களுக்கு கடிதம் எழுதினார். 
இதை எதிர்த்து கேயார் தரப்பு நீமன்றம் சென்றது. பொதுக்குழுவை கூட்ட தாணுவுக்கு உரிமை இல்லை என்று நீதிமன்றம் கூறிவிட்டது. தயாரிப்பாளர் சங்கம் நிம்மதி பெருமூச்சுடன் பணிகளை துவங்கி விட்டது. பாதியில் நின்றிருந்த பெப்சி தொழிலாளர்களின் ஊதிய பேச்சு வார்த்தையை தொடங்கிவிட்டது. 
படம் வெளியிடுவதற்கான முதல்கட்ட கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்தி இருக்கிறது. அதோடு வருகிற ஏப்ரல் மாதம் சங்கத்தின் பொதுக்குழுவை கூட்டி முக்கிய முடிவுகளுக்கு அங்கீகாரத்தை பெற திட்டமிட்டிருக்கிறது. பத்திரிகைகளுக்கு விளம்பர கட்டுப்பாடு இருப்பது போல தொலைக்காட்சிகளுக்கும் விளம்பர கட்டுப்பாடு கொண்டு வருவது. படம் வாங்காத சேனல்களுக்கு படத்தின் பாடல் காட்சிகள், டிரைய்லர் வழங்குவதை ஒழுங்குபடுத்துவது. 
 குறைந்த பட்ஜெட்டில் படம் எடுக்க வரும் புதிய தயாரிப்பாளர்கள் இடைத் தரகர்களிடம் மாட்டி ஏமாறாமல் இருக்க ஆலோசனை குழு அமைப்பது. சங்கத்தின் சட்ட விதிமுறைகள் சிலவற்றில் மாற்றம் கொண்டு வருவது. சங்கத்திற்கு தொடர்ந்து இடையூற செய்து வரும் சில்லரை கட்டடம் கட்டுவது. போன்றவை குறித்து ஆலோசித்து முடிவுகள் எடுக்கப்பட்டு அதற்கு பொதுக்குழுவிடம் அனுமதி பெற இருக்கிறார்கள்.
 "தேர்தலில் படுதோல்வி அடைந்த தாணு தொடர்ந்து நாங்கள் சங்க பணிகளை செய்ய விடாமல் நீதிமன்றம் மூலம் தொல்லை கொடுத்துவந்தார். உயர்நீதி மன்றம் எங்களுக்கு நீதி வழங்கி நாங்கள் சுதந்திரமாக செயல்பட வழி வகுத்து கொடுத்திருக்கிறது. தாணுவின் போலி பொதுக்குழுவை தடுத்திருக்கிறது. நாங்களே ஏப்ரல் 9ந் தேதிக்குள் பொதுக் குழுவை கூட்டி முக்கிய முடிவுகளை எடுக்க இருக்கிறோம்" என்கிறார் தலைவர் கேயார்.

No comments :

Post a Comment