ரஜினி, கமலுடன் மோதுகிறார் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர்!

No comments
நடிகர்களுக்காக படங்கள் ஓடிய நிலை மாறி, இப்போதெல்லாம் கதை நன்றாக இருந்தால் மட்டுமே படங்கள் ஓடுகின்றன. நடிகர்களுக்காக எந்த படமும் ஓடுவதில்லை. அதேசமயம், ஒரே நேரத்தில் பல படங்கள் வெளியாகாமல் ஒன்றன்பின் ஒன்றாக வெளியானால், சுமாரான படங்கள்கூட ஓரளவு வசூலிக்கும் நிலை ஏற்படுகிறது. அதனால்தான் சமீபகாலமாக பிரபலங்களின் படங்களை ஒரே நேரத்தில் வெளியிடுவதை தவிர்த்து வந்தார்கள். 
ஆனால், கடந்த பொங்கலுக்கு விஜய்யின் ஜில்லா, அஜீத்தின் வீரம் என இரண்டு படங்களும் வெளியாகி இரண்டுமே ஒரே அளவில வெற்றி பெற்றதையடுத்து, இப்போது கோடைவிடுமுறையில் பல பிரபலங்களின் படங்கள் திரைக்கு வர தயாராகிக்கொண்டிருக்கிறது. 
 அதில் ஏப்ரல் மாதம் ரஜினியின் கோச்சடையான் வருவது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், கமலின் விஸ்வரூபம்-2 கோடை விடுமுறையில் அதாவது ஏப்ரல் அல்லது மே மாதம் வெளியாக உள்ளது. இதற்கிடையே, இப்போதைக்கு வராது என்று கருதப்பட்டு வந்த பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் ஐ படமும் கோடை விடுமுறையில் களத்தில் இறங்குகிறதாம். தற்போது இறுதிகட்ட படப்பிடிப்புகாக எமிஜாக்சன் பங்குபெறும் பாடல் காட்சி ஒன்றை படமாக்கி வரும் ஷங்கர், படத்தின் கிராபிக்ஸ் பணிகளையும் தற்போது முடுக்கி விட்டுள்ளாராம்.

No comments :

Post a Comment