ஒரே படத்தில் மூன்று மொழிகளில் இசையமைத்த ஆதிஷ் உத்ரியன்!

No comments
தமிழில், ஆசைப்படுகிறேன், இன்னொருவன், வழி விடு கண்ணே வழி விடு. மேடை, ராமகிருஷ்ண தரிசனம் உள்பட பல படங்களுக்கு இசையமைத்தவர் ஆதிஷ் உத்ரியன். இவர் தற்போது மலேசியாவில் உருவாகியுள்ள 3 சீனியஸ் என்றொரு தமிழ் படத்திற்கும் இசையமைத்துள்ளார். மலேசியாவில் தமிழர்கள், சைனீஸ், அரேபியர்கள் என பலதரப்பட்ட மக்கள் வாழ்வதால் அவர்கள் அனைவரையும் திருப்திபடுத்தும் வகையில் இப்படத்தில் மூன்று விதமான வடிவில் பாடல்களுக்கு இசையமைத்திருக்கிறார் ஆதிஷ் உத்ரியன்.
 இதுபற்றி அவர் கூறுகையில், இந்த 3 சீனியஸ் படம் சயின்ஸ் சம்பந்தப்பட்ட கதையில் உருவாகியுள்ளது. தங்கள் பிள்ளைகளை இஞ்சினியராக, வக்கீலாக, டாக்டராக உருவாக்கும் நினைக்கும் பெற்றோர்கள், சயின்டிஸ்டாக்கவும் முன்வர வேண்டும் என்ற கருத்து அடிப்படையில் உருவாகியிருக்கிறது. இதில் டைரக்டர் கே.பாக்யராஜ் விஞ்ஞானியாக நடித்திருக்கிறார். 
மூன்று பள்ளி மாணவர்களும் மாறுபட்ட கேரக்டர்களில் நடித்துள்ளனர். மலேசிய தமிழில் உருவாகியுள்ள இந்த படம் அங்கு வாழும் அனைத்து மக்களையும் கவர வேண்டும் என்பதனால், அங்குள்ள தமிழர்களுக்காக கிளாசிக்கலை மையப்படுத்தி ஒரு பாடல், அதேபோல் சீனாக்காரர்களை மனதில் கொண்டு சைனீஸ் இசையில் ஒரு பாடல், மலேயாக்காரர்களுக்காக அரேபியன் பாணியில் ஒரு பாடல் என மூன்று விதமான பாடல்களை படத்தில் வைத்திருக்கிறோம். அதனால் இப்படத்தின் பாடல்களுக்கு ஒரு புதிய வடிவம் கிடைத்தது. 
அதேபோல் பலதரப்பட்ட மொழி மக்கள் வாழும் மலேசியாவில் அனைவருமே ஒற்றுமை உணர்வோடு வாழ்கிறார்கள். அதனால் அதை மையப்படுத்தி ஒரு பாடலுக்கு இசையமைத்திருக்கிறேன். ஆக, இந்த 3 சீனியஸ் படம் என்னை ஒரு புதுமையான இசையமைப்பாளராக வெளிப்படுத்தியிருக்கிறது என்று சொல்லும் ஆதிஷ் உத்ரியனுக்கு அந்த படத்தின் பாடல்களைக்கேட்டு விட்டு, இப்போது குறி, ஜெகஜால ஜில்லா ஆகிய மலேசிய தமிழ்ப்படங்களுக்கு இசையமைக்கும் வாய்ப்பும் கிடைத்துள்ளதாம். அதனால் மலேசியாவில் முகாமிட்டு பிசியாக இசையமைத்து வருகிறார் ஆதிஷ் உத்ரியன்.

No comments :

Post a Comment