இளமைக்கு ஆயுர்வேத சிகிச்சை பெறுகிறார் மோகன்லால்

No comments
மல்லுவுட் சூப்பர் ஸ்டார் பாலக்காட்டில் ரகசியமான ஒரு ஆயுர்வேத சிகிச்சை மையத்தில் இளமை சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறார். 3 வருடங்களுக்கு ஒருமுறை அவர் இந்த சிகிச்சை எடுத்துக் கொள்வது வழக்கம். தற்போது கடந்த ஒரு மாதமாக படப்பிடிப்புகளை ரத்து செய்து விட்டு சிகிச்சை எடுத்து வருகிறார். இன்னும் பத்து நாட்கள் சிகிச்சை தொடர்ந்து நடிக்கும். அங்கிருந்தபடியே அவர் தனது இணையதளத்தில் இறைவனுக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறார் அதில் அவர் கூறியிருப்பதாவது: 
“பாலக்காட்டில் கடந்த ஒரு மாதமாக ஆயுர்வேத சிகிச்சை பெற்று வருகிறேன். ஆரவாரமில்லாத அமைதியான சூழலில் தனியாக தங்கியிருக்கிறேன். அதிகாலையில் கோவில் மணியும், மசூதி பாங்கும், தேவாலய பாடல்களையும் கேட்டுக் கொண்டிருக்கிறேன். மனசுக்கு நிறைவாக இருக்கிறது. என் இளைமைகால நினைவுகள் மூழ்கிவிடுகிறேன். எனக்கு பிடித்த மாங்கனிகளும், பலாக்கனிகளும் நினைவுக்கு வருகிறது.
 ஆனால் இது பாஸ்ட்புட் காலம். வாழ்க்கை இயந்திரகதியாகிவிட்டது. என் பிள்ளைகள் நவீன உலகில் வாழ்கிறார்கள். மனிதர்களை சுதந்திரமாக வாழ இறைவன் அனுமதித்தான். இப்போது உலகம் எந்த நிலையில் உள்ளது என்பதை அவன்தான் சொல்ல வேண்டும்” என்று மோகன்லால் எழுதியிருக்கிறார்.

No comments :

Post a Comment