ஆச்சர்யம் ஆனால் உண்மை… ‘கோச்சடையானில்’ மறைந்த நடிகர் நாகேஷ் நடித்துள்ளாராம்.
ரஜினியின் ‘கோச்சடையான்’ படத்தில் மறைந்த நடிகர் நாகேஷையும் தொழில்நுட்ப உதவியுடன் நடிக்க வைத்துள்ளனராம்.
இது எப்படி சாத்தியம் என்கிறீர்களா… கோச்சடையான் படத்தை ‘பெர்ஃபாமன்ஸ் கேப்சரிங்’ என்ற தொழில்நுட்பத்தில் உருவாக்கியிருக்கிறார்களாம்.
அதன் மூலம் மறைந்த நடிகர் நாகேஷ் கோச்சடையானில் ஒரு கதாபாத்திரமாகவே வருகிறாராம்.
பழைய காட்சிகளை வைத்து அவரது கதாபாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளது.
சௌந்தர்யா இயக்கத்தில் அவரது அப்பாவும், சூப்பர்ஸ்டாருமான ரஜினி காந்த் நடிப்பில் தயாராகியுள்ள படம் ‘கோச்சடையான்’. இப்படத்தில் ரஜினியுடன் தீபிகா படுகோன், ஜாக்கி ஷெராப், ஷோபனா, சரத்குமார், ருக்மிணி, ஆதி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment