அஞ்சாதே படத்தைத் தொடர்ந்து ‘சாலையோரம்’ படத்தில் வில்லனாக மிரட்டும் பாண்டியராஜன்

No comments
அஞ்சாதே படத்தில் வில்லனாக நடித்த நடிகர் பாண்டியராஜன், சாலையோரம் என்ற படத்தில் மீண்டும் வில்லனாக நடிக்க இருக்கிறாராம். இப்படத்தை பி.வாசுவிடம் உதவி டைரக்டராக பணிபுரிந்த மூர்த்தி கண்ணன் டைரக்டு செய்கிறார். தனது காமெடி மற்றும் குடும்பப்பாங்கான படங்கள் மூலம் மக்களிடம் அமோக ஆதரவைப் பெற்றவர் இயக்குநரும்,நடிகருமான பாண்டியராஜன். பிரபல நாயகனாக வலம் வந்த பாண்டியராஜன், இடையில் சிலகாலம் சினிமாவை விட்டு விலகியிருந்தார். 
 பின்னர், மிஷ்கின் இயக்கத்தில் நரேன், பிரசன்னா மற்றும் அஜ்மல் நடிப்பில் வெளியான அஞ்சாதே படத்தில் வில்லனாக நடித்திருந்தார். இதுவரை காமெடி நடிகராக மட்டுமே அறியப் பெற்ற பாண்டியராஜனின் வில்லத்தனமும் மக்களைக் கவரத் தான் செய்தது.

No comments :

Post a Comment