மது விருந்தில் நடனமாடியதாக நடிகைகள் ஸ்ரேயா, ரீமாசென் மீது புகார்

No comments
மது விருந்தில் நடனமாடியதாக ஸ்ரேயா, ரீமாசென் மீது குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. இருவரும் தமிழ், தெலுங்கில் ஏராளமான படங்களில் நடித்துள்ளனர். ரீமாசென் தொழில் அதிபர் ஷிவ்கரனை திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு ஒதுங்கி இருக்கிறார். ஸ்ரேயா கடைசியாக ரெளத்திரம் என்ற தமிழ் படத்தில் நடித்தார். 2011–ல் இப்படம் வந்தது. அதன் பிறகு விக்ரமுடன் ராஜபாட்டை படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் ஆடினார். கன்னடத்தில் தயாரான சந்திரா படம் தமிழிலும் வெளியிடப்பட்டது. தற்போது தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து வருகிறார். 
 இந்த நிலையில் ஸ்ரேயாவும் ரீமாசெனும் மது விருந்து நிகழ்ச்சியொன்றில் பங்கேற்று நடனம் ஆடுவது போன்ற படங்கள் இண்டர்நெட்டில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. இந்த விருந்தில் ஆண்கள் சிலரும் பங்கேற்று உள்ளனர். ஒரு இளைஞரின் சட்டையை இளம்பெண் கிழிப்பது போன்ற காட்சியும் படத்தில் உள்ளது. நடிகைகளுக்கு சமூக சேவை அமைப்புகள் கண்டனங்கள் தெரிவித்து உள்ளன.

No comments :

Post a Comment