இலங்கை கடற்கரையில் அனுஷ்கா சர்மாவுடன் கோலி காதல் விளையாட்டு
மும்பை, மார்ச் 15–
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவரான வீராட் கோலி இந்தி நடிகை அனுஷ்கா சர்மாவை காதலித்து வருவது அனைவரும் அறிந்த ஒன்றாகும். இருவரும் பல்வேறு இடங்களில் ஒன்றாக சுற்றி திரிந்து வருகின்றனர்.
இந்திய அணி நியூசிலாந்தில் சமீபத்தில் விளையாடிய போது வீராட் கோலியை பார்ப்பதற்காக அனுஷ்கா சர்மா நியூசிலாந்து சென்றார். அங்கு இருவரும் ஒன்றாக சுற்றினர்.
இந்த நிலையில் வீராட் கோலியும், அனுஷ்கா சர்மாவும் இலங்கை கடற்கரையில் காதல் விளையாட்டில் ஈடுபட்ட தகவல் வெளியாகி உள்ளது.
அனுஷ்கா சர்மா சூட்டிங்குக்காக இலங்கை சென்று இருந்தார்.
ஆசிய கோப்பை போட்டியில் விளையாடி விட்டு நாடு திரும்பியவுடன் கோலி காதலியை பார்ப்பதற்காக இலங்கை சென்றார்.
சூட்டிங் இல்லாத சமயத்தில் இருவரும் அங்குள்ள கடற்கரையில் ஒன்றாக இணைந்து சுற்றி திரிந்தனர். கடந்த சில தினங்களாக காதலியுடன் ஜாலியாக இருந்து விட்டு கோலி நேற்று முன்தினம்தான் மும்பை திரும்பினார்.
20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணி நேற்று வங்காளதேசம் புறப்பட்டது.
இதற்காக அவர் அணியுடன் இணைந்து கொண்டார்.
ஆசிய கோப்பை போட்டியில் டோனி இல்லாததால் வீராட்கோலி கேப்டனாக பணியாற்றினார். இறுதிப் போட்டிக்கு கூட இந்தியா தகுதி பெறவில்லை. தோல்வி பற்றி எந்த கவலையும் இல்லாமல் அவர் ஆசிய கோப்பைக்கு பிறகு அனுஷ்கா சர்மாவுடன் இலங்கை கடற்கரையில் கும்மாளம் போட்டது மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment