நடிகையை ஆபாசமாக படம் எடுக்கவில்லை: பட அதிபர் ரவிதேவன்

No comments
விருகம்பாக்கத்தை அடுத்த சாலிகிராமம் காவேரி தெருவை சேர்ந்தவர் பாக்யஸ்ரீ (18). சினிமாவில் துணை நடிகையாக நடித்து வருகிறார். உயிருக்கு உயிராக, நாடோடி பறவை போன்ற படங்களிலும் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். தற்போது ரவி தேவன் தயாரிப்பில் ராமநாதன் இயக்கும் விளம்பர படமொன்றில் நடிக்கிறார். இந்த படத்தில் பாக்யஸ்ரீயை வைத்து ஆபாச காட்சிகளை படமாக்கியதாக அவரது தாய் நிர்மலா வளசரவாக்கம் போலீசில் புகார் அளித்துள்ளார். 
தாம்பத்ய உறவு சம்பந்தமான மாத்திரை அடங்கிய கவர்ச்சி படம் பொறித்த அட்டை பெட்டியை என் மகள் கையில் கொடுத்து படுக்கை அறைக்குள் செல்வது போல் ஆபாசமாக காட்சிகளை எடுக்க முயன்றனர் என்று புகாரில் அவர் குறிப்பிட்டு உள்ளார். தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வற்புறுத்தி உள்ளார். 
இந்த குற்றச்சாட்டுக்கு பட அதிபர் ரவிதேவன் மறுப்பு தெரிவித்து உள்ளார். அவர் கூறியதாவது:– மும்பை நிறுவனம் ஒன்று காமசூத்ரா விளம்பர படம் ஒன்றை எடுத்து தரும்படி அணுகியது. அதற்கான கதையை தயார் செய்து பாக்யஸ்ரீயை ஒப்பந்தம் செய்தோம். 
படுக்கை அறைக்குள் கிளாசில் பால் கொண்டு செல்வதற்கு பதில் அந்த நிறுவன காமசூத்ரா மாத்திரைகளை எடுத்து செல்வது போல் காட்சியை எடுத்தோம். இதில் நடிப்பதற்கு சம்மதம் தெரிவித்தனர். படப்பிடிப்பை நடத்தி முடித்தோம். அதன் பிறகுதான் பாக்யஸ்ரீ தாயார் நிர்மலா ஆட்சேபனை கிளப்பினார். நடிக்க பிடிக்காவிட்டால் முதலிலேயே மறுத்து இருக்கலாம். நடித்து முடித்து விட்டு காட்சிகளை நீக்க சொல்வது வியப்பாக உள்ளது. படத்தில் படுக்கையறை காட்சிகளை எடுக்கவில்லை.
 பாக்யஸ்ரீயை ஆபாசமாகவும் காட்டவில்லை. தற்போது போனில் எனக்கு மிரட்டல்கள் வருகின்றன. பெரும் தொகை கொடுத்தால் போலீசில் அளித்த புகாரை வாபஸ் பெறுவதாக மர்ம நபர்கள் பேசுகின்றனர். பணம் பறிக்க சதி நடக்கிறது. போலீசாரிடம் உண்மை விவரங்களை மனுவாக எழுதி கொடுத்துள்ளேன். இவ்வாறு ரவி தேவன் கூறினார்.

No comments :

Post a Comment