ஆள் மூலம் தமிழுக்கு வருகிறார் கன்னட நடிகை ஹார்த்திகா ஷெட்டி

No comments
எந்த ஆள் மூலம் வருகிறார் என்று கேட்காதீங்க. ஆள்ங்றது அவர் தமிழ்ல நடிக்கிற படத்தோட பெயர். மங்களூரில் பிறந்து பெங்களூரில் படித்து கன்னடத்தில் அறிமுகமானவர். அப்பா சினிமா பைனான்சியர். இதுவரை 5 கன்னட படங்களில் நடித்துவிட்டார். அதில் 3 ஹிட் படங்கள். தமிழில் ஆள் படத்தின் மூலம் அறிமுகமாகிறார். கன்னடத்திலிருந்து தமிழுக்கு வந்த காரணத்தை இப்படிச் சொல்கிறார். தென்னிந்திய நடிகைங்களுக்கு கோலிவுட்தான் கனவாக இருக்கும். எனக்கும் இருந்திச்சு. 
ஆள் படத்தின் மூலம் அது நிறைவேறியிருக்கு. கன்னட படங்களை விட தமிழ்லதான் நேட்டி விட்டி படங்களும் வருது. இன்றைக்கு இருக்கும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தியும் படங்கள் வருது. இந்த இரண்டும் எனக்கு பிடிக்கும். நடிக்கிறதுக்கு நல்ல வாய்ப்பாக உள்ள படங்கள் இங்கதான் வருது. எந்த புதுமையையும் தமிழ் ரசிகர்கள் கொண்டாடிவாங்க. 
ஆள் படத்துல அப்படி ஒரு புதுமையும் இருக்கு. கவர்ச்சியாகவும் நடிக்க ரெடி. வில்லேஜ் கேரக்டருக்கும் ரெடி. விரைவில் எனக்கென்று ஒரு இடத்தை பிடித்து விடுவேன் என்ற நம்பிக்கை இருக்கு. இங்கு ஏற்கெனவே நிறைய கார்த்திகா இருப்பால் என் பெயருக்கு பின்னால் ஷெட்டி என்று சேர்த்து வைத்திருக்கிறேன் என்கிறார்.

No comments :

Post a Comment