அஜித்தா, விஜய்யா? ஜனனி அய்யர்
அஜித் அல்லது விஜய் படத்தில் நடிக்க கேட்டால், நான் நிச்சயம் அஜித்துடன் தான் நடிப்பேன் என்று கூறுகிறார் ஜனனி அய்யர்.
அவன் இவன், பாகன் ஆகிய படங்களில் நடித்த ஜனனி அய்யர் தற்போது மலையாளத்தில் பிசியான நடிகை.
அவர் கையில் 4 மலையாள படங்கள் உள்ளன. இவரது நடிப்பில் அண்மையில் வெளியான த்ரில்லர் படமான தெகிடிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்நிலையில் அஜித் மற்றும் விஜய்யுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் யாருடன் நடிப்பீர்கள் என்று ஜனனியிடம் கேட்கப்பட்டது.
அதற்கு அவர் கூறுகையில், அவர்கள் இருவருடன் நடிக்கும் வாய்ப்பு எளிதில் கிடைக்காது. 2 பேருடனும் நடிக்க விரும்புகிறேன். ஆனால் நான் அஜித் ரசிகை என்பதால் அவருடன் நடிக்கும் வாய்ப்பையே ஏற்றுக் கொள்வேன் என்று கூறியுள்ளார்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment