நயன்தாரா படத்திற்கு 'யு'

No comments
நயன்தாராவின் படத்திற்கு 'யு' சான்றிதழ் கிடைத்துள்ளது. இந்தியில் வெற்றிகரமாக ஓடிய கஹானி படம் ரீமேக் செய்து தமிழில் நீ எங்கே என் அன்பே என்ற பெயரிலும், தெலுங்கில் கஹானி பெயரிலும் படமாக்கப்பட்டது. இந்த படம் நேற்று முன்தினம் தணிக்கை குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.படத்தை பார்த்த தணிக்கை குழுவினர், படத்திற்கு ‘U’ சான்றிதழ் கொடுத்துள்ளனர். மேலும் இந்த படத்தினை இயக்கிய சேகர் கம்முல்யாவை தணிக்கை குழுவினர் பாராட்டினர்.சேகர் கம்முல்யா இயக்கிய இந்த படத்தை என்டிமோல் இந்தியா நிறுவனம் தயாரிக்க, கீரவானி இசையமைக்கிறார். இந்த படத்தில் பசுபதி, வைபவ், ஹர்ஷா வர்தான் ரானே போன்றவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.

No comments :

Post a Comment