போட்டி கோதாவில் களமிறங்கிய ஆர்யா- விஷால்

No comments
ஆர்யா மற்றும் விஷால் சினிமா துறைக்கு வருவதற்கு முன்பே நல்ல நண்பர்களாக இருந்தவர்கள். இரண்டுபேரும் சினிமா துறையிலும் தங்களது நட்பை பரிமாறிக் கொள்ளும் வகையில் ஏதாவது ஸ்கிரிப்டை கேட்டால் ஒருவருக்கொருவர் பரிந்துரை செய்து கொண்டு தொழிலிலும் தங்களது நட்பை வெளிப்படுத்தி கொண்டு வருகின்றனர். இந்நிலையில் விஷாலின் பட்டத்து யானை படம் தெலுங்கில் தீருடு என்ற பெயரிலும் ஆர்யாவின் ராஜா ராணி படம் அதே பெயரிலேயே தெலுங்கில் ரிலீசாகி உள்ளது. இருவருக்கும் போட்டி ஏற்படும் வகையில் இவர்களது படங்கள் ஒன்றாக தெலுங்கில் ரிலிசாகி உள்ளது. 
 எனவே இந்த மகிழ்ச்சியினை வெளிப்படுத்தும் வகையில் ராஜா ராணி படத்தின் தயாரிப்பாளரான ஏ.ஆர். முருகதாஸ் தனது மைக்ரோ பிளாகரில், ராஜா ராணி படத்திற்கு பெரிய வரவேற்பை கொடுத்த தெலுங்கு ரசிகர்களுக்கு நன்றியை தெரிவித்திருந்தார். இந்த படத்தை இயக்கிய அட்லிக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

No comments :

Post a Comment