விஜய்யின் அடுத்த வில்லன்
பாலிவுட்டிலிருந்து விஜய்க்கு புது வில்லன் இறக்குமதி செய்யப்பட்டுள்ளார்.
துப்பாக்கி' படத்திற்குப் பிறகு மீண்டும் விஜய் – ஏ.ஆர்.முருகதாஸ் இணைந்துள்ள பெயரிடப்படாத படத்தின் நான்காவது கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து வருகிறது.
இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடிக்க, அனிருத் இசை அமைக்கிறார்.
இப்படத்தில் ஏற்கெனவே டோட்டா ராய் என்ற வங்காள நடிகர் வில்லனாக நடித்து வர, இன்னொரு முக்கிய வில்லனாக பாலிவுட் நடிகர் நீல் நித்தின் முகேஷும் நடிக்க இருக்கிறார் என்று கூறப்படுகிறது.
சமீபத்தில் இவர் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸை சந்தித்ததாகவும், இப்படத்தில் அவர் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார் என்றும் கூறப்படுகிறது.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment