கவுதமியை சந்தேகப்பட்ட செல்வராகவன்! கமல் கடுப்பு!!

No comments
நடிகர் கமல்ஹாசனுடன் நெருக்கமாக இருக்கும் கவுதமியை டைரக்டர் செல்வராகவன் சந்தேகப்பட்டதால்தான் விஸ்வரூபம் படத்தில் இருந்து அவர் நீக்கப்படுவதற்கு காரணம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. டைரக்டர் செல்வராகவன் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கவிருந்த படத்திற்கு விஸ்வரூபம் என பெயரிட்டு, கதை விவாமும் நடந்தேறியது. இந்நிலையில் திடீரென செல்வா அப்படத்தில் இருந்தே நீக்கப்பட்டார். இயக்குனர் பொறுப்பேற்ற கமல்ஹாசன், படக்குழுவினரோடு லண்டன் புறப்பட்டு விட்டார். படப்பிடிப்பு ஆரம்பித்து விட்டபோதிலும், ஏன் இந்த திடீர் லடாய் என்ற கேள்விக்கு மட்டும் விடை தெரியாமல் இருந்தது. 
 ஆரம்பத்தில் ஒரு வரி கதையைத்தான் ‌கமலிடம், செல்வா சொல்லியிருக்கிறார். அந்த ஒன் லைன் ஸ்டோரி பிடித்திருந்ததால், அடுத்த முறை சந்‌திக்கும்போது நிறைய பேசலாம் என்று கூறி செல்வாவை அனுப்பி வைத்திருக்கிறாம் கமல். அடுத்த சந்திப்பின்போது, செல்வா சொன்ன கதையை விட, நிறைய தகவல்களுடன் அற்புதமான கதை‌யை சொல்லியிருக்கிறார் கமல். கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் சொல்லப்பட்ட அந்த கதையை சேகரிப்பதற்கு ஒருவாரகாலம் இணையம், நூலகம் என பலமணி நேரம் செலவிட்டிருக்கிறார் கமல்ஹாசன்.
 ஆனால் செல்வாவோ... கொஞ்சம் பிஸியா இருந்ததால் முழுசா கதையை டெவலப் பண்ண முடியவில்லை என்று கூறியிருக்கிறார். இதில் ஆரம்பித்த முட்டலும், மோதலும் கவுதமி மேட்டரில், படத்தை விட்டே நீக்கும் அளவுக்கு போய் விட்டது என்று கோடம்பாக்கத்தில் கிசுகிசுக்கிறார்கள். அதென்ன கவுதமி மேட்டர்...? கதை விவாதம் நடந்‌தபோது கவுதமியும் வந்து உட்கார்ந்து கொள்வாராம். விஸ்வரூபம் படத்திற்கு காஸ்ட்யூமராக நானே வேலை பார்க்கிறேன் என்று கூறியிருக்கிறார். அதை ஏற்றுக் கொண்ட செல்வா, கதை விவாதத்தின்‌போது கவுதமி பங்கேற்பதையோ, அவர் சொல்லும் கருத்துக்களையோ, சீன்களையோ ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டாராம். அதோடு கவுதமியின் கருத்துக்கள் எல்லாமே கமல்ஹாசன் சொல்லிக் கொடுத்தவையாக இருக்கும் என்று சந்தேகப்பட்டிருக்கிறார் செல்வா
. கவுதமியை சந்தேகப்பட்ட காரணத்தினாலும் விஸ்வரூபத்தில் இருந்து செல்வா நீக்கப்பட காரணமாக இருந்திருக்கலாம் என்ற செய்தியும் கோடம்பாக்கத்தை உலா வந்து கொண்டிருக்கிறது. எப்படியோ மூலக்கரு கொடுத்த செல்வாவுக்கு பட்டை நாமம் போட்ட சூட்டோடு விஸ்வரூபம் விஸ்வரூபமாக உருவாக ஆரம்பித்து விட்டது.

No comments :

Post a Comment