அகர்வாலால் கடுப்பான இரண்டு இளம் ஹீரோக்கள்!
ஆஹா ஓஹோவென ஓடும் என எதிர்பார்த்து வரலாற்று படம் எடுத்து மண்ணை கவ்விய செல்வமான டைரக்டரும், அவரது காதல் மனைவி அகர்வாலும் விவாகரத்து செய்து விட்டனர் என்பது எல்லோருக்கும் தெரிந்த சங்கதிதான். விவாகரத்து முடிந்த கையோடு விதவிதமான லேட்டஸ்ட் ஸ்டில்களை எடுத்து, இன்னமும் இளமையுடன்தான் இருக்கிறேன் என்று தண்டோரோ போடத குறையாக அம்மணி எல்லா தயாரிப்பாளர்களுக்கும், இயக்குனர்களுக்கும் ஸ்டில்களை அனுப்பி வாய்ப்பு கேட்டார்.
அகர்வாலின் அழகை பார்த்து மயங்கிய பலரும் தங்களது படத்தில் நடிக்க அழைத்தாலும், விரல் நடிகரின் அழைப்பிற்கு பச்சைக் கொடி காட்டினார் அகர்வால். படத்தில் உங்கள் கேரக்டருக்கு அதிக முக்கியத்துவம் இருக்கும் என சிம்பு கூறியதையடுத்து சம்மதம் தெரிவித்திருக்கிறார் அகர்வால்.
இதுஒருபுறம்மென்றால்... இந்த அர்வாலால் முன்னணி இளம் ஹீரோக்கள் 2 பேர் ஒருவர் மீது ஒருவர் செம கடுப்பில் இருக்கிறார்கள்.
அவர்கள் வேறு யாருமல்ல. விரல் நடிகரும், உச்ச நடிகரின் மருமகனும்தானாம். தனது அண்ணனின் முன்னாள் மனைவியை வேண்டுமென்றே தனது படத்தில் ஒப்பந்தம் செய்திருக்கிறார் என்று மருமகன் நடிகர் கூறி வருகிறாராம். ஆனால் விரல் தரப்போ... படத்தில் பெரிய காஸ்டிங் தேவைப்பட்டதால் அகர்வாலை போட்டிருக்கிறோம், என்று கூறியதுடன் மருமகன் மீது கடுப்பில் இருக்கிறதாம்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment