நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் கேயாரை தோற்கடிப்போம்: தாணு தடாலடி!

No comments
தயாரிப்பாளர் சங்கத்தில் எல்லா பிரச்னைகளும் தீர்ந்து அமைதி திரும்பி விட்டது என்று எல்லோரும் நினைத்துக் கொண்டிக்கும் நேரத்தில் மீண்டும் புயல் வீச அரம்பித்து விட்டது. நடந்து முடிந்த சங்கத் தேர்தலில் அதிக ஓட்டுக்கள் பெற்று வெற்றி பெற்ற பொருளாளர் ராதாகிருஷ்ணன் இப்போது கலைப்புலி தாணு அணிக்கு வந்து விட்டார். கணிசமான அளவு சிறுபட தயாரிப்பாளரின் ஆதரவை வைத்திருக்கும் ராதாகிருஷ்ணன் தனது அணிக்கு வந்து விட்டதால் மீண்டும் உற்சாகமாகியிருக்கிறார் தாணு. அந்த உற்சாகத்தோடு அவர் அளித்த பேட்டி: நடந்து முடிந்த தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் முறைகேடுகள் நடந்தது. அதற்காக வழக்கு போட்டிருக்கிறேன். அது நடந்து வருகிறது. ஆனால் எல்லா வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்ட விட்டதாக கேயார் கூறிவருகிறார். 
பதவிக்கு வந்து 6 மாதமாகியும் எந்த வேலையும் நடக்கவில்லை. உறுப்பினர்களுக்கு மருத்துவ காப்பீடு திட்டத்தைகூட சரிவர அமுல்படுத்தவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த நாங்கள் 125 உறுப்பினர்கள் கையெழுத்து போட்டு பொதுக்குழுவை கூட்டச் சொன்னோம். கூட்ட மறுத்தார்கள். கோர்ட்டுக்கு போனோம். வருகிற ஏப்ரல் 7ந் தேதிக்குள் சிறப்பு பொதுக்குழுவை கூட்ட வேண்டும். அதில் நம்பிக்கை இல்லா தீர்மானம் இடம்பெற வேண்டும். அப்படி கூட்டாவிட்டால் மனுதாரர்கள் கூட்டலாம் என்று கோர்ட் சொன்னது. 
அதன்படி வருகிற ஏப்ரல் 7ந் தேதிக்குள் பொதுக்குழுவை கூட்டாவிட்டால், நாங்கள் கூட்டுவோம். பொதுக்குழு எப்போது கூடினாலும் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் கேயாரை தோற்கடிப்போம். மீண்டும் தேர்தலை சந்தித்து வெற்றி பெறுவோம். இவ்வாறு கலைப்புலி எஸ்.தாணு கூறினார்.

No comments :

Post a Comment