கோச்சடையானின் பாடல் வரிகள் வைரமுத்து வெளியிட்டார்!

No comments
சூப்பர் ஸ்டார் ரஜினி, தீபிகா படுகோனே நடிப்பில் செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கி உள்ள கோச்சடையான் படத்தின் பாடல்கள் வருகிற 9ந் தேதி வெளியிடப்பட இருக்கிறது. இதில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வைரமுத்து எழுதிய பாடல்களை அவரே வெளியிட்டுள்ளார். நேற்று ஒரு காதல் பாடலை ரசிகர்களின் பார்வைக்கு தந்தோம். இன்னும் இரண்டு பாடல்கள் இதோ... பாடலுக்கான சூழல் வீரத் தளபதி கோச்சடையான் ஒரு போரில் எதிரிகளை வீழ்த்திவிட்டு நாட்டுக்கு திரும்புகிறார். 
வரும் வழியில் சாலையில் இருபுறமும், வீடுகளின் பால்கனிகள், மொட்டைமாடிகளில் நின்ற கொண்டு மக்கள் கோச்டையானை போற்றி பாடுகிறார்கள். அந்த வாழ்க்கை ஏற்றுக் கொள்ளும் கோச்சடையான் மக்களுக்கு நல்ல தத்துவங்களை சொல்கிறார். இப்படியான ஒரு பாட்டு சூழல். இதில் மக்களுக்கு தத்துவம் சொல்லும் குரல் ரஜினியுடையது. ஆம் ரஜினியே பாடியுள்ளார். 
இனி பாடலுக்கு வருவோம். மக்கள் பாடுகிறார்கள்...

 உண்மை உருவாய் நீ 
உலகின் குருவாய் நீ
 எம் முன் வருவாய் நீ
 இன்மொழி அருள்வாய் நீ

 உன் மார்போடு காயங்கள் ஓராயிரம்
 உன் வாழ்வோடு ஞானங்கள் நூறாயிரம்
 தாய் மண்ணோடு உன்னாலே மாற்றம் வரும்
 இனி உன்னோடு உன்னோடு தேசம் வரும் 
இப்போது ரஜினி பாடுகிறார்...

 எதிரிகளை ஒழிக்க எத்தனையோ வழிகள் உண்டு முதல் வழி மன்னிப்பு மாறும் மாற்றம் ஒன்றுதான் மாறாதது மாறுவதெல்லாம் உயிரோடு மாறாததெல்லாம் மண்ணோடு பொறுமைகொள் தண்ணீரைக்கூட சல்லடையில் அள்ளலாம் அது பனிக்கட்டி ஆகும்வரை பொறுத்திருந்தால் பணத்தால் சந்தோஷத்தை வாடகைக்கு வாங்கலாம் விலைக்கு வாங்க முடியாது பகைவனின் பகையை விட நண்பனின் பகையே ஆபத்தானது சூரியனுக்கு முன் எழுந்து கொள் சூரியனை ஜெயிப்பாய் நீ என்பது உடலா உயிரா பெயரா மூன்றும் இல்லை செயல் நீ போகலாம் என்பவன் எஜமான் வா போகலாம் என்பவன் தலைவன் நீ எஜமானா? தலைவனா? நீ ஓட்டம் பிடித்தால் துன்பம் உன்னை துரத்தும் எதிர்த்து நில் துரத்திய துன்பம் ஓட்டம் பிடிக்கும் பெற்றோர்கள் அமைவது விதி நண்பர்களை அமைப்பது மதி சினத்தை அடக்கு கோபத்தோடு எழுகிறவன் நஷ்டத்தோடு உட்காருகிறான். 
நண்பா எல்லாம் கொஞ்ச காலம். 
 அடுத்த பாடலுக்கான சூழல் இது கிளைமாக்ஸ் பாடல்.
 போர்களில் தான் பெற்ற வெற்றியை மக்களுக்கு அர்ப்பணித்து கோச்சடையான் பாடுவதாக வரும் பாடல். இதை ஏ.ஆர்.ரஹ்மானே பாடியிருக்கிறார். 

இனி பாடல்... 

 ஆகாய மேகங்கள் பொழியும்போது
ஆதாயம் கேளாது தாய்நாடு 
காக்கின்ற உள்ளம் என்றும் தனக்காக வாழாது
 ஏ வீரனே கர்ம வீரனே 
கடமை வீரனே 
தோல்விகளால் துவண்டு விடாதே
 வெற்றிகளால் வெறி கொள்ளாதே
 கல்லடி கல்லடி படுமென்பதாலே 
மரம் காய்க்காமல் போவதில்லை 
சொல்லடி சொல்லடி படுமென்பதாலே 
வெற்றி காணாமல் போவதில்லை 
மாலைகளை கண்டு மயங்காதே
 மலைகளை கண்டு கலங்காதே
 காற்றே காற்றே நீ தூங்குவதே இல்லை 
கர்ம வீரனே வீரனே நீ ஓய்வதே இல்லை
 வாழ்வே வாழ்வே நீ தீருவதேயில்லை
உன் வாழ்விலே சத்தியம் தோற்பதேயில்லை 
 நின்ற இடத்தில் நிற்க வேண்டுமா
நீ ஓடிக்கொண்டே இரு
 நிம்மதி வாழ்வில் வேண்டுமா
பாடிக்கொண்டே இரு 
கோழை மகன் மன்னித்தால் 
அது பெரிதல்ல பெரிதல்ல 
வீரன் மகன் மன்னித்தால்
 அது வரலாறு வரலாறு 
 பொன்னும் மண்ணும் வென்று முடிப்பவன் கடமை வீரனே...
 அந்தப் பொன்னை ஒரு நாள் மண்ணாய்ப் பார்ப்பவன் கர்ம வீரனே.

No comments :

Post a Comment