துக்கடா வேடங்களை தட்டிக்கழிக்கும் சோனியா அகர்வால்!
தனுஷ் நடித்த காதல் கொண்டேன் படத்தில் நடித்தவர் சோனியா அகர்வால். அதன்பிறகும் அவரது அண்ணன் செல்வராகவன் இயக்கிய 7ஜி ரெயின்போ காலனியில் நடித்தபோது செல்வராகவன்-சோனியா அகர்வாலுக்கிடையே காதல் தீ பற்றிக்கொண்டது. அதனால் அதன்பிறகு சோனியா அகர்வால் சில படங்களில் நடித்ததையடுத்து அவர்கள் திருமணம் செய்து கொண்டனர். ஆனால், சொற்ப காலத்திற்குள்யே அவர்களுக்கிடையே முட்டிக்கொண்டதால் விவாகாரத்து பெற்று பிரிந்தனர்.
அதையடுத்து, செல்வராகன் மறுமணம் செய்து கொண்டார். ஆனால் சோனியா அகர்வாலோ இன்னும் தனிமரமாகவே வாழ்ந்து வருபவர், ஒரு நடிகையின் வாக்கு மூலம் படத்தில் மீண்டும் கதாநாயகியாக நடித்தார். ஆனால் பின்னர் சரியான படங்கள் இல்லை. இருப்பினும் போராடிக்கொண்டேயிருக்கிறார்.
இந்த நேரத்தில், சிலர் அவரை அக்கா, அண்ணி வேடங்களில் நடிக்க அழைத்த வண்ணம் உள்ளனர்.
ஆனால், அவற்றை ஏற்க மறுக்கும் சோனியா, அடுத்து பாலக்காட்டு மாதவன் என்ற படத்தில் நடிக்கிறேன்.
முக்கியமான கதாநாயகி வேடம். அதனால் அந்த படத்திற்கு பிறகு எனக்கு கதாநாயகி ரோல் கிடைக்கிறதோ இல்லையோ வெயிட்டான கதாபாத்திரங்கள் கிடைக்கும். அதனால் துக்கடா கேரக்டர்களில் நடித்து என் பெயரை கெடுத்துக்கொள்ள நான் விரும்பவில்லை என்று தன்னை துரத்தும் வாய்ப்புகளை தட்டிக்கழித்து வருகிறார் சோனியாஅகர்வால்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment