அடக்கி வாசிக்கும் அமலாபால்!

No comments
மைனா, தெய்வத்திருமகள் படங்களில் நடித்து வந்தநேரம், அடுத்தடுத்து முன்னணி ஹீரோக்களின் படங்கள் அமலாபால் பக்கம் திரும்பிக்கொண்டிருந்தன. கூடவே தெலுங்கு படங்களிலும் நடித்து வந்ததால், அப்போது அவரை பட விசயமாக எந்த கம்பெனி தொடர்பு கொண்டாலும் எக்குத்தப்பாக கால்சீட் கொடுப்பவர், எக்கச்சக்கமாக கூலியும் கேட்டார். அப்படித்தான் தனுஷ் நடிக்கயிருந்த 3 பட விசயத்திலும் நடந்திருக்கிறார் அமலாபால். அதனால்தான் அப்படத்தை தொடங்குவதற்கு முன்பு தனுஷ், அவரது மனைவி ஐஸ்வர்யா இருவரும் மீடியாக்களை சந்தித்தபோது கூடவே இருந்த அமலாபால், அதன்பிறகு அந்த படத்தில் இல்லாமலிருந்தார்.
 காரணம், தனுஷ் படம் என்றபோதும்கூட சம்பளத்தை எகிறி அடித்ததுதான் காரணமாம். ஆனால், இப்போது அதே தனுசுடன் வேலையில்லா பட்டதாரியில் நடித்து முடித்து விட்ட அமலாபால், அடுத்து தனுஷ் நடிக்கும் காக்கா முட்டையிலும் அமலாபாலே நடிப்பதாக செய்தி பரவி கிடக்கிறது. இப்ப மட்டும் எப்படி ஒர்க்அவுட் ஆச்சு என்கிறீர்களா? 
தலைவா தடுக்கி விட்டதில் குப்புற விழுந்த அமலாபால், இனி அடக்கிவாசித்தால் மட்டுமே சினிமாவில் நீடிக்க முடியும் என்பதை புரிந்து கொண்டு, அதை நடைமுறைப்படுத்தினார்.
அதன்காரணமாகவே மறுபடியும் தனுசுடன் நடிக்கும் அளவுக்கு நிலைமை மாறியிருக்கிறது. அதோடு, ஜெயம்ரவியுடன் நடித்துள்ள நிமிர்ந்து நில் படத்தில் நடித்தபோது அவர் நடந்து கொண்ட விதத்தைப்பார்த்து வியந்து போன டைரக்டர் சமுத்திரகனி, அடுத்து தான் கதை எழுதி தயாரிக்கும் படத்திலும் அமலாபாலுக்கே சான்ஸ் கொடுத்திருக்கிறார்கள்.
 ஆக, ஒரு படத்தில் நடித்து விட்டால், இதோடு விட்டால் போதும் என்று அமலாவை ஓரங்கட்டாமல் மீண்டும் மீண்டும் சான்ஸ் கொடுக்கும் அளவுக்கு ரொம்ப நல்ல பிள்ளையாக நடந்து கொள்கிறாராம் அவர். இந்த அடக்கம் இன்னும் நீடித்தால் அமலாபாலின் உயரம் ரொம்ப பெருசாகி விடும் போல் தெரிகிறது.

No comments :

Post a Comment