பத்து விரலைக்காட்டுகிறார் ஹன்சிகா!
சிம்புவை காதலிப்பதாக ஓப்பனாக அறிவித்த பிறகு படிப்படியாக ஹன்சிகாவுக்கான பட வாய்ப்புகள் குறைந்து அவரது மார்க்கெட் படுத்து விட்டதாகவே தெரிகிறது. சிம்புவுடன் நடித்து வரும் வாலு, வேட்டைமன்னன் படங்கள், சிவகார்த்திகேயனுடன் நடித்த மான்கராத்தே, ஜெயப்பிரதா மகனுடன் நடித்த உயிரே உயிரே, சுந்தர்.சி இயக்கும் அரண்மனை ஆகிய படங்களின் படப்பிடிப்பு கிட்டத்திட்ட முடிந்துவிட்டன. அதனால் அடுத்து ஆர்யாவுடன் மீகாமன், விக்ரமுடன் ராஸ்கல் ஆகிய படங்களில்தான் புதிதாக கமிட்டாகியிருக்கிறார் ஹன்சிகா. இதனால், ஹன்சிகாவின் நம்பர் ஒன் நடிகை போஸ்ட் பறி போய் விட்டதாகவே கூறப்படுகிறது.
ஆனால் இதுபற்றி ஹன்சிகாவைக்கேட்டால், நம்ப்-ஒன், நம்பர்-டூ பற்றி எனக்கு எதுவும் தெரியாது. ஆனால், இப்போதும் நான் ரொம்ப பிசியாக இருக்கிறேன் என்கிறார். தமிழில் நடித்து முடித்துள்ள படங்களையும், தெலுங்கில் கமிட்டாகியுள்ள படங்களையும் சேர்த்து விரல்விட்டு எண்ணுபவர், பத்துப் படங்கள் என் பாக்கெட்டில் உள்ளன என்கிறார்.
ஆக, சொந்த ஊரான மும்பைக்கு சென்று தோழிகளுடன் ஜாலியாக ஊர் சுற்றகூட நேரம் கிடைக்காமல் படப்பிடிப்புக்காக ஊர் ஊராக அலைந்து கொண்டிருக்கிறேன். இதற்கடுத்து நடிக்கவும் சில டைரக்டர்களிடம் கதை கேட்டு வருகிறேன. அதனால், என் மார்க்கெட் படுத்து விட்டது என்று யாரும் சொல்லத் தேவையில்லை.
எப்போதும் நான் பரபரப்பாகவே இருந்து கொண்டிருக்கிறேன் என்கிறார் ஹன்சிகா.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment