தமிழில் இடம்பிடிப்பேன்: பார்வதி நாயர்

No comments
மலையாள தேசத்திலிருந்து ஏற்கனவே பூ பார்வதி அடிக்கடி வந்து போகிறார். அடுத்து வரப்போகிறவர் பார்வதி நாயர். மலையாளத்தில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் பார்வதி நாயர் நிமிர்ந்து நில் படத்தின் மூலம் தமிழுக்கு வருகிறார். தமிழில் முன்னணி இடத்தை பிடிப்பேன் என்று பார்வதி நாயர் உறுதி பூண்டிருக்கிறார். "பிறந்தது, வளர்ந்தது எல்லாமே துபாய்தான். ஆனால் நான் பக்கா மலையாளி. அப்பாவின் வேலை நிமித்தமாக துபாயில் செட்டிலாயிட்டோம். அழகா பிறந்துட்டாலே மாடலிங்தானே.
 அதைத்தான் நான் செய்தேன். அப்படியே மலையாள சினிமாவுக்கு வந்துட்டேன். பத்து படத்துக்கு மேல நடிச்சிட்டேன். தமிழ்ல நடிக்கணும்ங்றது நீண்ட நாள் ஆசை. சமுத்திரகனி சார் மூலம் அது நிறைவேறிடுச்சு. இதுல சின்ன ரோல்தான் அது பேசப்படும்னு சொன்னார். 
உடனே நடிக்க ஒத்துக்கிட்டேன். நிமிர்ந்த நில் ரிலீசுக்கு பிறகு என்னோட கேரக்டர் பற்றி எல்லோரும் பேசுவாங்க. அதுக்கு பிறகு தமிழ் சினிமாவில் முன்னணி இடத்தை பிடிப்பேன். நிறைய படங்கள்ல நடிக்கணுங்ற ஆசையெல்லாம் கிடையாது. குறைவான படங்கள்ல நடிச்சாலும் நிறைவான படங்கள்ல நடிக்கணும்" என்கிறார் பார்வதி நாயர்

No comments :

Post a Comment