குத்துச்சண்டையில் இறங்கிய ஜெயம்ரவி, ஜீவா, சிவகார்த்திகேயன்!

No comments
எம்.குமரன் சன்ஆப் மகாலட்சுமி என்ற படத்திலேயே குத்துச்சண்டை வீரராக நடித்தவர் ஜெயம்ரவி. அதையடுத்து இப்போது பூலோகம் படத்தில் வடசென்னையைச்சேர்ந்த குத்துச்சண்டை வீரராக நடித்துக்கொண்டிருக்கிறார். இப்படத்திற்காக கடும் சிரத்தை எடுத்து உடல்கட்டை மாற்றி ஹாலிவுட் வில்லனுடனும் மோதியிருக்கிறார் ஜெயம்ரவி. இதேபோல், யான் படத்தில் ஜீவாவும் குத்துச்சண்டை வீரராகத்தான் நடிக்கிறாராம். இவர்களைத் தொடர்ந்து மான்கராத்தே படத்தில் சிவகார்த்திகேயனும் குத்துச்சண்டை வீரராகத்தான் நடித்துள்ளாராம். 
ஆக, ஒரே நேரத்தில் மூன்று படங்கள் குத்துச்சண்டையை மையமாகக்கொண்டு கதையில் உருவாகியிருக்கிறது. அதனால் இந்த படங்களில் யார் நடித்த படம் முந்திக்கொண்டு வருகிறதோ? என்பதை பலரும் எதிர்பார்த்துக்கொண்டிருக்க இப்போது சிவகார்த்திகேயன் நடித்துள்ள மான்கராத்தே தான் முதலில் வருகிறது. 
 ஆக, ஜெயம்ரவி, ஜீவா இருவரும் பின்வாங்கி நின்றபோதும், தங்கள் படங்களின் சாயலில் இல்லாமல் வேறு மாதிரியான கோணத்தில் கதை இருந்தால் தங்களை எந்த வகையிலும் அது பாதிக்காது என்று சொல்லிக்கொண்டு மான்கராத்தேயின் வரவை எதிர்நோக்கியுள்ளனர்.

No comments :

Post a Comment