அமலா பால் மீது தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார்..!?

No comments
அமலா பால் ஆட்டம் ஓவராக இருக்கிறது..! என்ற அதிருப்தி குரல்கள் தயாரிப்பாளர்கள் மத்தியில் வேகமாக ஒலிக்க ஆரம்பித்திருக்கிறது. மைனா படத்துக்கு முன்புவரை ஒரு துணை நடிகை ரேன்ஜில் இருந்தவர்தான் அமலா பால். மைனாவின் வெற்றி இவரை முன்னணி நடிகையாக்கியது. அதற்குள் பழசை மறந்துவிட்டாரே என்று புலம்புகிறார்கள் திரையுலகைச் சேர்ந்தவர்கள். அம்மா, அப்பா, தம்பி சகிதமாகத்தான் படப்பிடிப்புக்கு வருகிறாராம் அமலாபால். அவர்களுக்கான ஹோட்டல், விமான டிக்கெட் செலவுகளே ஏகப்பட்ட லட்சங்களை காலி பண்ணிவிடுகிறதாம். 
 அதோடு, எனக்கு உள்ளூர் மேக்கப் மேன், ஹேர் டிரஸ்ஸர் வேண்டாம். மும்பையிலிருந்துதான் மேக்கப் மேன், ஹேர் டிரஸ்ஸர் வர வைக்க வேண்டும் என்று கறாராகச் சொல்கிறாராம். அமலா பால் சொல்கிறபடி மும்பையிலிருந்து மேக்கப்மேன், ஹேர் டிரஸ்ஸரை வர வைத்தால் அவர்களுக்கு ஒரு நாள் சம்பளமாக 25 ஆயிரம் மொய் எழுத வேண்டியிருக்கிறதாம். 
தவிர, அவர்கள் தங்கும் ஹோட்டல் செலவு வேறு. இந்த வகையில் அமலா பாலினால் ஏகப்பட்ட லட்சங்கள் விரயமாகிறதாம். இது குறித்து தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் கொடுக்கவும் பாதிக்கப்பட்ட தயாரிப்பாளர்கள் திட்டமிட்டு வருகிறார்களாம்.

No comments :

Post a Comment